வீட்ல இருந்து வெளிய போக முடியல – ஜெயிலர் படத்தில் வர்மனாக கலக்கிய விநாயகம் வெளியிட்ட வீடியோ.

0
2395
- Advertisement -

ஜெயிலர் படம் குறித்து நடிகர் விநாயகன் பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், அதிக முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் தெலுங்கு ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது.

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் அனிருத் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்கள் அனைவருக்குமே காரை பரிசளித்திருக்கிறார். பின் ஜெயிலர் படத்தில் இருந்து தனக்கு வந்த லாபத்தில் மூலம் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

வர்மன் வெளியிட்ட வீடியோ:

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடித்த விநாயகனுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து நடிகர் விநாயகம் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர், நான் ஃபாரஸ்ட்டில் இருந்தபோது போன் சரியாக வேலை செய்யவில்லை. எனக்கு தொடர்ந்து நிறைய போன் வந்து கொண்டே இருந்தது. அப்போது தான் ஜெயிலர் படம் குறித்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து எனக்கு கால் வந்திருந்தது.

படம் குறித்து சொன்னது:

அவர்களிடம் விசாரித்த போது இந்த படத்தில் ரஜினி சார் நடிக்கிறார் என்றும் நெல்சன் இயக்குகிறார் என்றும் தெரிந்தது. உடனே நான் கதையை கூட கேட்காமல் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் நான் தான் முக்கிய வில்லன் என்று நெல்சன் கூறியிருந்தார். வர்மன் கதாபாத்திரம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நெல்சன் ரொம்ப நன்றிப்பா. இப்போது நான் வீட்டிலிருந்தே வெளியே போக முடியாத அளவிற்கு இந்த படம் வெற்றியை கொடுத்திருக்கிறது. கனவிலும் நான் நினைத்து பார்க்கவில்லை. ரஜினி சாரையும் நான் மறக்கவே மாட்டேன் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement