பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷிகா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 72 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் தொழிலாளி- முதலாளி டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு வெடித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இருந்தாலுமே ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த தகவல் :
அந்த வகையில் கடந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நடக்கவே இல்லை. கடந்த வாரம் நாமினேஷனில் தர்ஷிகா, சௌந்தர்யா, ஜாக்குலின், ராயன், பவித்ரா, அன்சிதா, விஷால், அருண் சத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதில் ஓட்டின் நிலவரப்படி சத்யா, தர்ஷிகா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்கள். பின் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் முதலில் சத்யா வெளியேறி இருந்தார். அதன் பின் தர்ஷிகா வெளியேறி இருந்தார்.
View this post on Instagram
தர்ஷிகா பதிவு:
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு தர்ஷிகா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீங்கள் என் மீது காட்டிய அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிக் பாஸ் வீட்டில் நான் நானாக தான் இருந்தேன். எந்த ஒரு நேரத்திலும் நான் எனக்கு பொய்யாக இல்லை. என்னுடைய உணர்வுகளும், கேம் பிளேவும் நேர்மையானது தான். 'Call a spade is a spade' என்பது தான் என்னுடைய கேம். எனக்கு சப்போர்ட் செய்த எல்லோருக்குமே நன்றி என்று கூறியிருக்கிறார்.

தர்ஷிகா குறித்த தகவல்:
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தர்ஷிகா. இவர் நிறைய சீரியல்களில் வில்லி ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் பொன்னி சீரியல் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். நாட்கள் செல்ல செல்ல இவர் விஷால் உடன் சேர்ந்து கொண்டு சுற்றி இருந்தார். இதனாலே விளையாட்டில் கவனம் இல்லை. இவர் வெளியேறியதற்கு இதுவும் ஒரு காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.






