அண்ணாமலை கூட்டத்தில் திடீரென்று சீறிப் பாய்ந்த காளை. தப்பித்த அண்ணாமலை. வைரலாகும் வீடியோ.

0
1311
- Advertisement -

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் தீடிரென சீறி பாய்ந்த முரட்டு காளை தெறித்து ஓடிய பாஜகவினர். நூலிழையில் உயிர் தப்பினார் அண்ணாமலை. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. இந்த பாதயாத்திரையை சிறப்பிக்கும் வகையிலும் இதற்க்கு பலம் சேர்க்கும் வகையிலும் மத்திய அமைச்சர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளனர்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

பாதயாத்திரைக்கு இடையில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடியை மூன்றாவது முறை பிரதமரக்குவோம் என்றும் கூறினார். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி . வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

தீடிரென சீறிய காளை

பாதயாத்திரையின் அடுத்த கட்டமாக இன்று மதுரை மாவட்டம் மேலூரில் யாத்திரையை தொடங்கினார். அங்கு அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்திருந்தனர் பாஜகவினர். அக்கூட்டத்தின் அருகே கட்டி வைத்திருந்த காளை மாடு தீடீரென அங்கு இருந்தவர்களின் மீது பாய்ந்தது. அங்கு அருகில் இருந்த அனைத்து பாஜகவினரும் பயந்து அங்கும் இங்கும் ஓடினர். அருகில் இருந்த சில பாஜகவினர் “பாரத் மாதகீ ஜே“ என முழங்கமிட்டனர். அதன் பின் மாட்டை கயிறு கட்டி அடக்க முயன்றனர். அதன் பின் அண்ணாமலை அந்த மாட்டின் நெற்றியில் கை வைத்து அந்த மாட்டின்னை சமாதான படுத்தினார். இந்நிகழ்வு அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.         

-விளம்பரம்-
Advertisement