“எச்.ராஜா இப்படி பேசுவது முதல் முறை அல்ல. எந்த வழக்கையும் ரத்து செய்ய முடியாது” – அதிரடி உத்தரவு.

0
431
- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அங்கம் வகித்து வருபவர் முன்னாள் MLA எச். ராஜா. இவர் அவ்வபோது சர்ச்சை கூறிய வகையில் கருத்து தெரிவித்த அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துரில்  கடந்த 2018ஆம் ஆண்டு இந்து முன்னணி பொதுகூட்டத்தில் அவருடைய உரையை ஆற்றினார். அப்போது அவர்  இந்து அறநிலைதுறை அதிகாரிகளையும் மற்றும் பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களையும் மிகவும் விமர்சித்து தரக்குறைவாக பேசினார். இது குறித்து வேடச்சதூர் நாகர்கோவில் என தனி தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

-விளம்பரம்-

ஏழு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் பெரியார் சிலையை உடைப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும் ஹெச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது உள்ளது. அந்த புகாரின் பேரில் அவர் மேல் மூன்று  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் திமுகவின் துணை பொதுசெயலாளர் கனிமொழி கூறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்தற்கும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில்  பதியப் பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்க கூடிய 11 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -

இந்த வழக்கானது ஆகஸ்ட் 25 அன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஹெச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி பால் கனகராஜ்  அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவிவழி செய்தி தான் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தான் ட்வீட் போட்டார் என எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

கனிமொழி எம்.பி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து மட்டுமே. அனைத்தையும் கேட்டறிந்த பின்னர்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘பெண்களைக் குறி வைத்து அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருமுறை இல்லை. பலமுறை இது போன்று அவர் பேசியுள்ளார் என கண்டனம் தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். அந்த வழக்கானது இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வுக்கு வந்தது.

-விளம்பரம்-

இன்றைய தீர்ப்பு:

பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்தது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பப் பெண்கள் குறித்து தவறாக பேசியது என பாஜகவின் எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து, 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.

“இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும்” நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement