இந்த ஆண்டு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்களின் லிஸ்ட் – இந்த லிஸ்ட்ல கூட தளபதி தான் டாப்.

0
212
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு பெயரும் புகழும் இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்களை குறித்த விமர்சனங்களும் அதிகமாக இருக்கிறது. முன்னணி பிரபலங்களே பல சர்ச்சைகளில் சிக்கி சோசியல் மீடியாவில் மீம் மெட்டீரியல் ஆகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு வெளியாகி அதிக ட்ரோல் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

வாரிசு:

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்தது வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் குடும்ப பின்னணியை கொண்ட கதை. மேலும், இந்தப் படத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து இருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் தில் ராஜூ தான். அவர் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் டான்ஸ் வேணும்மா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா? ஃபைட் இருக்கு என்றெல்லாம் ரைமிங்காக பேசி இருந்தார். இதை தான் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆதிபுருஷ் :

பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ஆதிபுருஷ். இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கிண்டல், கேலி செய்யப்பட்ட படத்தில் முக்கியமான ஒன்றாக ஆதிபிருஷ் இருக்கிறது. காரணம், இந்த படத்திற்கு பட குழுவினர் கொடுத்த பில்டப் தான். ஆனால், கடைசியில் இந்த படம் கார்ட்டூன் போல் வந்திருப்பதை தான் நெட்டிசங்கள் கிண்டல் செய்திருந்தார்கள்.

மாமன்னன்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத்பா ஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று வசூலை பெற்றிருந்தாலும் அதிக ட்ரோலும் செய்யப்பட்டிருந்தது. அதற்கு காரணம் இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் கதாபாத்திரம் தான். இந்த படத்தில் பகத் வில்லனாக இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை சோசியல் மீடியாவில் ஹீரோவாக்கி மீம் மெட்டீரியலாக மாற்றி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சந்திரமுகி 2:

தமிழ் சினிமாவிலேயே சூப்பர் ஹிட் கொடுத்த வெற்றி படங்களில் ஒன்று சந்திரமுகி. இந்த படத்தின் முதல் பாகத்தை பி வாசி இயக்கி இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியாகிருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ஓரளவு செய்ததாக கூறப்பட்டது. ஆனாலும், இந்த படத்தை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து இருந்தார்கள். அதற்கு காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும், கங்கனாவின் நடிப்பும் தான்

லியோ:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், சாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலேயே இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த படத்தில் ஒன்று. இந்த படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.இப்படி இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தாலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தார்கள். அதற்கு காரணம் இந்த படத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் கதை தான். இது உண்மையில்லை என்று லோகேஷ் கூறியதை கேட்டு கிண்டல் செய்திருந்தார்கள்.

Advertisement