‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ ன்னு கேட்டாலே ஞாபகம் வர்ற நடிகை – 21 வயதில் வாழ்கை முடிந்த சோகம்.

0
305
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் கேரள மண்ணில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் பத்மினி, அம்பிகா, ராதா, ஊர்வசி தொடங்கி தற்போது இருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மஞ்சு மோகன் வரை என பல நடிகைகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வரிசையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மோனிஷா உன்னி.

-விளம்பரம்-

இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னுடைய 16 வயதிலேயே மலையாள மொழி படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல் படத்தின் மூலமே இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனை அடுத்து இவர் சில மலையாள படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதற்குப் பின்பு ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்திற்கு டி ராஜேந்திரன் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி தொடர்ந்து படங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது உன்னை நினைத்தேன் பாட்டு படித்தேன் என்ற படத்தின் மூலம் தான்.

இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் வரும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இன்னும் இந்த பாடல் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. காலங்கள் கடந்தாலுமே மோனிஷா உன்னியின் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பிறகும் இவளுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. இதனால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், மோனிஷா வாழ்க்கையில் யாரும் நினைக்காத அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மோனிஷா தன்னுடைய தாயுடன் ஆலப்புழா அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோனிஷா அநியாயமாக உயிர் இழந்தார். அவருடைய தாய் சில காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

இப்படி 16 வயதிலேயே தேசிய விருது வென்ற மோனிஷா 21 வயதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது.
இவருடைய இழப்பு பலருக்குமே பேர் அதிர்ச்சியாக இருந்தது. மேலும், மோனிஷா உன்னி மறைந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து அவர் மணிவண்ணன் இயக்கத்தில் நடித்திருந்த மூன்றாவது கண் என்ற படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement