போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி செய்த வடிவேல் பாலாஜி !

0
3762
vadivel-balaji-comedy-actor
- Advertisement -

கலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான். வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன்…’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார். அதுனாலதான் அவரை சீசன் 4 ஆடிஷனில் செலக்ட் செய்தோம்.
vadivel balajiஅவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.

-விளம்பரம்-

கலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சதும் அது இது எது ஷோல கலந்துக்கிட்டார் பாலாஜி. ‘சிரிச்சா போச்சு’வோட மிகப்பெரிய பில்லரே வடிவேல் பாலாஜிதான். இதுவரைக்கும் வடிவேல் பாலாஜி யாரையும் சிரிக்க வைக்காம போனதேயில்ல. சோலோவா வந்து சிரிக்க வைக்கிறதுதான் பாலாஜியோட ஸ்பெஷல். வடிவேலோட எல்லா கெட்டப்பையும் சிரிச்சாப் போச்சுல போட்டிருக்கார். கான்செப்ட் இல்லாத டைம்ல கெஸ்டுகள்கிட்ட, ஆங்கர்கிட்ட ஏதாவது பேசி சிரிக்க வெச்சிடுவார்.

- Advertisement -

கெஸ்டுகளை சிரிக்க வைக்கிறதுக்காகவே சில டெம்ப்ளேட்ஸ் வச்சிருக்கார் பாலாஜி. அவர் லிப்ட்ல இருந்து வெளிய வந்ததும் சில சமயம் மூணு பேர்ல இரண்டு பேரு சிரிச்சிடுவாங்க. சிரிக்காத அந்த ஒருத்தர் பக்கத்துல போய், ‘என்ன டஃப் கொடுக்குறீயா’னு கேப்பார். அதுலையே அந்த கெஸ்ட்டும் சிரிச்சிடுவார்.

முன்னாடியெல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்டுல சிரிக்காம இருந்தா டி.வி கொடுப்பாங்க. அந்த டைம்ல வந்த எபிசோடுல யாராச்சும் சிரிக்காம இருந்தா, ‘ஒரு டிவிக்காக சிரிக்காம இருக்கியா..?, நீ அந்த டிவியை வாங்கிட்டு போகும்போதே அது சுக்கு நூறா உடைஞ்சிரும்’னு சபிப்பார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.
balaji மூணு கெஸ்ட்ல பெரும்பாலும் 2 ஆண், 1 பெண் வருவாங்க. மூணு பேருக்கும் கை கொடுக்கப்போவார். 2 ஆண்களுக்கும் கை கொடுத்துட்டு, பொண்ணுக்கு கை கொடுக்க போகும்போது மட்டும் வானத்தைப் பார்த்து, தரையைப் பார்த்து வெட்கப்படுவார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.

-விளம்பரம்-

பாலாஜி பல சமயம் லேடி கெட்டப் போடுவார். அந்த டைம் கெஸ்ட்டா வர ஆண்கள்கிட்ட, ‘என்ன குறுகுறுனு பாக்குற’, ‘என்னய்யா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு’, ‘நீ எதிர்பார்க்குறது என்கிட்ட இல்ல’னு சொல்லுவார். எல்லாரும் சிரிச்சிருவாங்க. இப்படி சில டெம்ப்ளேட்ஸ் வச்சுக்கிட்டு வொர்க் பண்ணுவார்.

வடிவேல் கெட்டப் போடுறதுக்கு சமமா லேடி கெட்டப் போடுறதுக்கும் அதிகம் ஆர்வம் காட்டுவார் பாலாஜி. லேடிஸ் என்ன என்ன யூஸ் பண்றாங்க, காஸ்ட்டியூம்ஸ் எப்படி பண்றது, மேக்கப் எப்படி பண்றதுனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவார். சிரிச்சா போச்சுல லேடி கெட்டப் போடுறதுக்கு பல பேர் யோசிப்பாங்க. மீசை, தாடியை எடுக்கணும், வீட்டுல திட்டுவாங்கனு பல காரணங்கள் சொல்லுவாங்க. இப்போவரைக்கும் நான் என்ன கெட்டப் சொன்னாலும், எப்போ லேடி கெட்டப்போட சொன்னாலும் பாலாஜி பண்ணுவார். அதுதான் அவரோட ஸ்பெஷல். லேடி கெட்டப் போடுறதுக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். பாலாஜிகிட்ட அது நிறையவே இருக்கு.

‘அது இது எது’க்கு கெஸ்ட்டா வர பல பேர், வந்ததும் இன்னைக்கு வடிவேல் பாலாஜி வராறானுதான் முதலில் கேட்பாங்க. அதுதான் பாலாஜியோட வெற்றி. காமெடி பண்ற பல பேரோட ரியல் லைஃப் ரொம்ப சோகமா இருக்கும்னு சொல்றதுக்கு மிகச் சிறந்த உதாரணம் வடிவேல் பாலாஜியோட வாழ்க்கைதான். கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது ஆரம்பத்தில் பாலாஜி, பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அதுக்கப்பறம் அதை விட்டுட்டு முழு நேர வேலையா இதை பண்ணிட்டு இருக்கார். எனக்கு அது லேட்டாத்தான் தெரியும். அப்போதான் நான் யோசிச்சேன், எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருந்தார்னு. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.
vadivel balaji actorவடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி தத்ரூபமா பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல நம்மகிட்ட பேசுறவங்களை செமையா கலாய்ச்சு விட்டுருவார். அப்படித்தான் பாலாஜி அதிகமா மக்களை ரசிக்க வச்சார். யார் என்ன சொன்னாலும் டக்குனு கலாய்ச்சி விட்டிருவார். அதுக்காகவே பலபேர் உஷாரா இருப்பாங்க.

சிரிச்சா போச்சுல அடிக்கடி பாலாஜிக்கு ஒரு சோதனை நடக்கும். அவரோட நேரத்துக்குன்னே வருகிற கெஸ்ட் எல்லாரும் வயசானவங்களா இருப்பாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட,‘வயசான காலத்துல வீட்டுல உக்காந்து டி.வி பாத்தோமா, பேர புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தோமானு இருக்கணும். அதைவிட்டுட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அதுவும் நான் வர எபிசோடுக்கு உங்களை யார் வரச்சொன்னா?’னு கேட்பார். அப்பறம் ஒரு தடவை மூணு கெஸ்ட்ல இரண்டு பேரை சிரிக்க வச்சுட்டார். அதுல ஒரு பொண்ணு மட்டும் சிரிக்கலை. அவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார், ஒண்ணும் நடக்கலை. அப்போதான் ஆங்கர் பாலாஜிகிட்ட, ‘அவங்களுக்கு தமிழ் தெரியாது’னு சொல்லுவார். அப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாலாஜி, அல்டிமெட்டா இருக்கும்.

பாலாஜிக்கு சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ‘சின்ன, சின்ன ரோல்கள் பண்ணி பாலாஜி மேல இருக்கிற எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுனு நல்ல வாய்ப்பு வரும்போது பண்ணு’னு சொன்னேன். அதுக்காகக் காத்திருக்கிறார் பாலாஜி.

Advertisement