இப்படி தான் அந்த படத்துக்கு தியேட்டர் வாசல்ல முருகர் சிலைய வச்சாங்க – திருப்பூர் சுப்ரமணியம்

0
2323
- Advertisement -

ஆதிபுருஷ் படக்குழு வைத்த கோரிக்கைக்கு தமிழ்நாடு திரையரங்கம் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் ‘ஆதிபுருஷ் ‘ படத்தில் நடித்து இருக்கிறார். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு முன்னோட்டமாக வெளியான படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தன. படத்தின் காட்சிகள் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

படக்குழு வைத்த கோரிக்கை:

இப்போதும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒவ்வொரு சீட் காலியாக விட வேண்டும். இந்த படம் ராமாயணத்தில் வரும் அனுமனை மையப்படுத்தி இருக்கிறது. ஆகவே அனுமன் படத்தை பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக கட்டாயம் ஒரு சீர் ஒதுக்க வேண்டும் வேண்டும் என்று ஆதிபுரூஷ் பட குழு அறிவித்து இருக்கிறது.

திருப்பூர் சுப்புரமணியம் அளித்த பேட்டி:

இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து சிலர் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறர்கள். அந்த வகையில் சாமி படத்துக்கு ஒரு சீட் ஒதுக்குற மாதிரியே, லாரன்ஸ், சுந்தர் சி இயக்கம் பேய் படங்களுக்கும் ஒரு சீட்டு ஒதுக்கினால் தியேட்டருக்கு வருபவர்களின் நிலைமை என்ன? ஆகும் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருப்பது, தியேட்டர்களில் அனுமனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். அதே நேரத்தில் தயாரிப்பாளர் ஆசைப்படுகிறார் என்பதால் நாங்கள் இதனை பெரிய விஷயமாக பார்க்கவில்லை.

-விளம்பரம்-

படக்குழு வைத்து கோரிக்கை குறித்து சொன்னது:

ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். அப்படித்தான் இதையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் 100 நாட்கள் தியேட்டர்கள் நிரம்பி இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. பெரிய நடிகர்களின் படங்களை அதிகபட்ச 3 நாட்கள் தான் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. அதற்கு பிறகு திரையரங்கு இருக்கைகள் எல்லாம் காலியாக தான் இருக்கிறது. அதனால் ஆதிபுரூஸ் படம் தமிழ்நாட்டில் ஹவுஸ்புல் காட்சிகளாக இருக்க போவதில்லை. ஆதிபுரூஸ் பட குழு அனுமனுக்கு ஒரு சீட் தான் கேட்டிருக்கிறது. நாங்கள் 10 சீட் கூட கொடுக்க தயாராக இருக்கிறோம்.

சினிமா படங்கள் குறித்து சொன்னது:

மதத்தை நுழைத்தாலும் மக்கள் வந்து படம் பார்க்க மாட்டார்கள். ஏற்கனவே தேவரின் தெய்வம் படத்திற்கு முருகர் சிலை எல்லா தியேட்டருக்கு முன்பும் வைத்திருந்தார்கள். ஆடி வெள்ளி படம் வெளியான போது வேப்பிலை தோரணம் எல்லாம் கட்டிருந்தார்கள். இதெல்லாம் ஏற்கனவே நடந்தது தான். அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை. இப்போது சமூக வலைத்தளங்கள் இருப்பதால் இந்த மாதிரியான தகவல்கள் எளிதாக சென்று கொண்டிருக்கின்றது. இவர்கள் படத்திற்குள் மதத்தை நுழைப்பது பக்திக்காக கிடையாது. தியேட்டருக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகத்தான். படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement