27 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி ஒரு ரோலில் ரஜினி.!எக்ஸ்க்லுசிவ் அப்டேட்.!

0
1652
Rajini-166
- Advertisement -

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்து. இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைத்துள்ளனர் என்று வெளியான தகவலை கூட ஏ ஆர் முருகதாஸ் மறுத்திருந்தார்.

-விளம்பரம்-

2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனக்காக மற்றுமொரு கதையை தயார் செய்யும்படி கார்த்திக் சுப்புராஜிடம், ரஜினி கூறியுள்ளாராம்.

இதையும் படியுங்க : ரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி.! தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.!

- Advertisement -

ரஜினி – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் இந்த
படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. முருகதாஸ் ஏற்கனவே ஸ்பைடர், துப்பாக்கி போன்ற போலீஸ் அதிகாரி சம்மந்தபட்ட படங்களை எடுத்துள்ளார்.

ஆனால்,பல்வேறு படங்களில் போலீஸ் அதிகாரியாகநடித்துள்ள ரஜினியோ இறுதியாக கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘பாண்டியன் படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் . அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியை காக்கி சட்டையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

-விளம்பரம்-
Advertisement