விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. இவர் தற்போது அதே விஜய் டிவியில் “தேன்மொழி” என்ற தொடரில் பள்ளி மாணவியாகவும், துருதுருவென சுட்டித்தனம் கொண்ட பெண்ணாகவும் நடித்து வருகிறார். தேன்மொழி சீரியலில் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலில் ஜாக்லினுக்கு தங்கையாக நடித்தார் அஞ்சலி. சமீப காலமாகவே இவர் சீரியல் பக்கமே காணவில்லை. இதனால் அவருக்கு பதில் வேறு ஒருவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து பேட்டியில் கேட்டபோது அவர் கூறியது,நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பீக்காம் முடிச்சிட்டு சி.ஏ. படிச்சுட்டு இருந்தேன். நான் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன்.
சன் லைப் மசாலா காஃபி நிகழ்ச்சியில் தான் நான் முதன் முதலாக காமெடி கான்செப்ட் பண்ணினேன். அங்க தான் என்னுடைய கணவர் பிரபாகரனையும் சந்தித்தேன். அவர் விஜய்சேதுபதி வாய்ஸில் பேசி கொண்டிருந்தார். அந்த வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவரிடம் நேராகவே சென்று உங்களுடைய விஜய் சேதுபதி வாய்ஸ் ரொம்ப சூப்பராக உள்ளது என்று சொன்னேன். அதற்கு பிறகு மூன்று மாதம் கழித்து ரெண்டு பேரும் சேர்ந்து ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி பண்ண தொடங்கினோம். அந்த நிகழ்ச்சியில் நண்பர்களாக இருந்த நாங்கள் பின் காதலர்கள் ஆகி விட்டோம். இப்போது திருமணமும் செய்து கொண்டோம்.
கல்யாணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள் :-
எங்கள் வீட்டிற்கு நாங்கள் காதலிப்பது தெரிய வந்தது. பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எனது வீட்டில் எங்களுடைய காதலுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் நான் பிரபாகரன் அம்மா –அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு ஜூன் மாதத்தில் தான் கல்யாணம் நடை பெற்றது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் எங்களுடைய காமெடி கான்செப்ட்டை பார்த்து எல்லோரும் பாராட்டுவார்கள். எங்களுடைய கெமிஸ்ட்ரியும், காமெடியும் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தேன்மொழி’ சீரியலில் நான் ஜாக்லினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன்.
சீரியல் வாய்ப்பை இழந்த நடிகை அஞ்சலி :-
அந்த சீரியலில் நான் ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நடித்து இருந்தேன். பிரபாகரன் என்னை பார்த்து ஷாக் ஆகி விட்டார். அதோடு எல்லோரும் நான் ஸ்கூல் பிள்ளைக்கான வயசுல தான் இருக்கேன் என்றும் கிண்டல் பண்ணுவாங்க. அந்த சீரியல்ல இப்ப என் கதாபாத்திரம் லவ் டிராக் போயிட்டு இருக்கு. அதனால் அதற்கு என் முகம் மெர்ஜ் ஆகவில்ல என்றார்கள். அதனால என்னுடைய முகம் அதுக்கெல்லாம் செட்டாகாது என்றும், எனக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைக்க முடிவு பண்ணிட்டாங்க.
நான் பார்க்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரிகிறேன் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி சீரியலை விட்டு விலகி விட்டேன். இப்ப நான் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறேன். பிப்ரவரி மாதம் படத்தின் சூட்டிங் நடக்கப்போகிறது. கூடிய விரைவில் நீங்கள் என்னை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என்று உற்சாகத்துடன் கூறினார். நேற்று அஞ்சலியும் அவர் கனவர் பிரபாகரனும் வாங்காத கடனுக்கு பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
வாங்காத கடனை கட்ட சொல்லி மிரட்டல் வந்தது :-
இது குறித்து அவர்கள் கூறுவது 2020 ஆம் ஆண்டு இறந்து போன என் தந்தை தவனை முறையில் செல்போன் வாங்கியதாகவும்.அதற்கு பணம் செலுத்துமாறு கூறினார்கள். முடியாது என கூறினேன் அதற்கு SI பதவியில் இருக்கம் காவல் துறை அதிகாரி மற்றும் வக்கீல் ஒருவர் போன் செய்து பணத்தை கட்டுங்கள் இல்லை என்றால் 15 நாட்கள் சிறை செல்ல வேண்டியிருக்கம் என மிரட்டல் விட்டனர். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டபோது எங்கள் பாலோயர்கள் இது போன்ற சம்பவங்கள் எங்களுக்கும் வருகின்றனர் என கூறினார்கள்.அதை தொடர்ந்தே காவல் ஆனையம் வந்து புகார் தெரிவித்தோம்.