ஆக்ஷன் இல்லாமல் தனுஷ் படமா ? – திருச்சிற்றம்பலம் முழு விமர்சனம் இதோ.

0
757
Thiruchitrambalam
- Advertisement -

தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். நீண்ட நாள் ரசிகர்கறள் எதிர்பார்த் இந்த படம் இன்று வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். அதோடு இந்த பாடல் வெளியாகி 4 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. மேகமே பாடலும் வெளியாகி ௧௧ மில்லியன் பார்வையாளரை கடந்து சென்றது.

-விளம்பரம்-

கதைக்களம் :-

இப்படி ஒரு வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் எதிர்பார்த்து இன்று திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களின் பசிக்கு தீனி போட்டதா ?இல்லையா ? என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் தனுஷ்ம் அவரது அப்பாவாக நடித்துள்ள பிரகாஷ்ராஜும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமகன் படத்தில் கார்த்தியும் அவர்து தந்தையும் பேசிக்கொள்ள மாட்டார்கள். இதே தொடர்ந்து தனுசுக்கு தாத்தவாக வரும் பாரதிராஜா அவரின் பெயரான திருச்சிற்றம்பலம் Jr என்று பெயர் வைக்கிறார்கள். இந்த பெயரினால் பள்ளியில் இருந்து காலேஜ் படிக்கும் வரை உடன்படிக்கும் தோழர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார் தனுஷ்.

- Advertisement -

நடிப்பில் பிச்சி உதறிய நித்யா மேனன் :-

இதற்கு இதற்கு அப்புறமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வந்த தனுஷ். தன் படிப்பை முடித்துவிட்டு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு டெலிவரி பண்ணும் உணவு டெலிவரிபாயாக வேலை செய்து கொண்டு வருகிறார். தனுஷ் இப்படி வேலை செய்வதை பார்த்து கேலிசெய்யும் நண்பர்களுடன் போடும் சண்டை காட்சிகள் மிக அற்புதமாக இருந்தது. அதன்பின் ராஷி கன்னாவை பார்க்கும் தனுஷ் அவர் மேல் காதல் வயப்பட்டு ராஷி கன்னாவை காதல் செய்வதற்கு கவிதை எழுதிக் கொண்டு தோழி சோபனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்தியா மேனன் இடம் படித்துக் காட்டும் காட்சிகள் இந்த சீன்களில் வரும் ஷோபனா கதாபாத்திரம் நித்தியாமேனன் அவருடைய நடிப்பில் பட்டைய கிளப்பி உள்ளார். இவர் நடிப்பை பார்த்து பலரும் தியேட்டரில் சில்லறையை சிதறி விடுகின்றனர்.

காமெடி காட்சிகள் :-

மித்ரன் ஜஹவர் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் காமெடி காட்சிகள் எல்லோமே எப்படி சிரிக்கும் வண்ணம் இருந்ததோ அதே மாதிரி இந்த படத்திலும் நித்யா மேனன் தனுஷ் செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கும் படி இருந்தது. பாரதிராஜா கவிதை வடிவில் செய்யும் காமெடி காட்சிகளும் தியேட்டரில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக இருந்தது. மேலும் இந்த படத்தில் முதல் பாதியில் கதைக்களம் சிட்டியில் சென்று இருந்தாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கிராமத்து சைடும் கதைக்களம் சென்றிருந்தது.

-விளம்பரம்-

சென்டிமென்ட் காட்சிகள் :-

தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் இருப்பதைப் போல இந்த படத்திலும் வழக்கம் போல இரண்டாவது பாகத்தில் செண்டிமெண்டாக படம் செல்கிறது. பிரகாஷ்ராஜ் தனுசுக்கு என்ன தான் வேண்டுமாம் ? என்று கேள்வி கேட்கவும் அதற்கு தனுஷ் அம்மாவையும் தங்கையும் திருப்பிக் கொடு என கேட்கும் சென்டிமென்ட் காட்சிகளும் ராஷி கன்னாவை காதலித்து வரும் தனுஷ் இடம் ஊர் பூரா தேடுவதை விட்டுவிட்டு கூட இருக்கிறவர்களை பார் என்று பாரதிராஜா நித்யா மேனனை சுட்டிக்காட்டும் காட்சிகளும் மனம் நெகிழும் படியாக வந்துள்ளது. படத்தில் நித்தியாமனனின் தம்பியாக வரும் விஜே ப்புவின் சென்டிமென்ட் காட்சிகளும் அற்புதமாக வந்துள்ளது அவரும் சென்டிமென்ட் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார்.

படம் எப்படி இருந்தது :-

திருச்சிற்றம்பலம் படத்தில் புதிய படம் பார்க்கும் ஒரு திருப்தி இல்லை ஏனெனில் ஏற்கனவே தமிழில் ரிலீஸ் ஆன யாரடி நீ மோகினி, விருமன் மற்றும் சில படங்களில் கனவையே கலந்து அரைத்த மாவயை அரைத்து தற்போது நிலவும் மாடர்ன் சூழ்நிலைக்கேற்ப கதையை மாற்றி புதிய படமாக நம்முடைய கொடுத்திருக்கிறார்கள் தவிர வேறொன்றும் இல்லை. அதே போல படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் இல்லை. ஒரே ஒரு சண்டை காட்சி வருகிறது அதுவும் ஆக்ஷன் காட்சி என்று சொல்லிவிட முடியாது. படத்தில் அனிருத் இசை நம்மளை அறியாமலும் சில இடங்களில் மெய் மறக்க வைக்கும் அளவுக்கு உள்ளது குறிப்பாக மேகம் கருக்குது பாடல் அனிருத் இசை நம்மளை வேற ஏதோ உலகத்திற்கு கூட்டிச் செல்வது போல் இருந்தது மற்றும் படத்தின் நடிகர்களை தேர்வு செய்த விதம் அருமையாக இருந்தது நித்யா மேனன் கதாபாத்திரம் மிக அற்புதமான ஒரு கதாபாத்திரம. இந்த படத்திற்கு பெரும் வலுவை சேர்த்துள்ளது. ஒரு தடவை சென்று படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம் விட்டு.

Advertisement