அம்பேத்கரின் புத்தகம் வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சுக்கு தற்போது திருமாவளவன் பதில் கொடுத்துள்ளார். அம்பேத்கரின் ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’. இந்த நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, ‘ எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெம்டும்டேவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். பின், நிகழ்ச்சியில் பேசிய விஜய், 'விசிக தலைவர் தொல் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரின் மனம் முழுக்க என்று நம்மோடு தான் இருக்கும்.' என்று பேசியிருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திருமா:
இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ' தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும், அம்பேத்கரைப் பற்றி பேசி இருப்பதும் பெருமையாக உள்ளது. பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேச மாட்டார். அந்த வரிசையில் ' எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிட்டு இருப்பது வரவேற்பு மற்றும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=IaxQWtHMwW8
விஜய்க்கு பதில் அளித்த திருமா:
மேலும், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை நான் இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன். அதோடு இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்காமல் போனதற்கு, விஜய் அவர்கள் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை.
அரசியல் சாயம் பூசுகிறார்கள்:
ஆனால், எங்கள் இருவரையும் வைத்து அரசியல் சாயம் பூசி உள்ளனர். அவர்கள் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று கருத்துக்களை முன் வைத்தது முக்கியமான ஒன்று. ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். ஓரளவு எங்களாலும் யுகிக்க முடியும். யார் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை எங்களால் கணிக்க முடியும். அந்த வகையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள். அதை நான் விரும்பவில்லை.
https://www.youtube.com/watch?v=oTJ_O2UABno
அது அவரின் சுதந்திரம்:
மேலும், விஜய் மீது எந்த ஒருத்தனும் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சுதந்திரமாக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு. இதில் எந்த அழுத்தமும் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு சுதந்திரம் இருக்கிறது. அதன்படி தான் அவரும் அதை கூறி இருக்கிறார் என்று திருமா விளக்கம் அளித்துள்ளார்.






