அர்ச்சனாவுக்கு கிடைத்த பாராட்டில் மீண்டும் வன்மத்தை கக்கிய மாயா, பூர்ணிமா- வைரலாகும் வீடியோ

0
235
- Advertisement -

பிக் பாஸ் 7 கொண்டாட்டத்தில் அர்ச்சனாவை பார்த்து மாயா-பூர்ணிமா செய்திருக்கும் செயல் குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்திருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, எஸ் மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு.

- Advertisement -

பிக் பாஸ் 7:

மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். அர்ச்சனா வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா ஆகியோர் பிடித்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ரசிகர்கள் எதிர்பார்ப்பது பிக் பாஸ் கொண்டாட்டம் தான். வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே பிக் பாஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பிக் பாஸ் கொண்டாட்டத்தை காணவில்லை.

பிக் பாஸ் கொண்டாட்டம்:

இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் தான் சென்னை பூந்தமல்லியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்கான சூட் நடைபெற்றிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பவா செல்லதுரை, பிரதீப் யுகேந்திரன், ஐசு ஆகியோர் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்களை வைத்து விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விசித்ரா- தினேஷ் இடையே நடந்தது:

மாயா- பூர்ணிமா அதே பழைய உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் விளையாடி இருக்கிறார்கள். இதை பார்த்து கூல் சுரேஷ் கடுப்பாகி பேசி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் மதுரை முத்து, ராமரும் கலந்து இருக்கிறார்கள். அதோடு நிகழ்ச்சியினுடைய ஹைலைட்டே விசித்ரா- தினேஷ் எபிசோட் தான். நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்ல் விசித்ரா, தினேஷிடம் சாரி என்று சொன்னவுடன் தினேஷும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே அவருக்கு பதில் கொடுத்து விட்டார். ஒரு வழியாக விசித்திரா- தினேஷ் சர்ச்சை இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் முடிவு வந்திருக்கிறது.

மாயா-பூர்ணிமா செய்த வேலை:

இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவை சந்திக்க அவருடைய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். பின் அவர்கள் அர்ச்சனாவை பாராட்டி, பரிசு கொடுத்து இருக்கிறார்கள். அர்ச்சனாவை ரசிகர்கள் புகழ்ந்து பேசுவதை கேட்டு மாயா-பூர்ணிமா இருவருமே கிண்டல் கேலி செய்யும் வகையில் நடந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதெல்லாம் தாங்க முடியலடா என்று மாயா, பூர்ணிமா மீது சாய்ந்து உறங்குவது போல் நடந்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, நீங்கள் இன்னும் திருந்தவில்லையா? ஒருத்தனை எவ்வளவுதான் நீங்கள் டார்கெட் செய்வீர்கள். இது நீங்க காசு கொடுத்து ப்ரொமோட் செய்த கூட்டம் கிடையாது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement