மாதவனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த சூர்யா தங்கை பிருந்தா- எந்த படம் தெரியுமா?

0
235
- Advertisement -

மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க நடிகர் சூர்யாவின் தங்கை மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகுமார். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவரது மகன்கள் தான் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தன் தந்தையை போலவே இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். அதோடு சிவகுமாருக்கு மகன்கள் மட்டும் இல்லை பிருந்தா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

- Advertisement -

சிவக்குமார் மகள்:

சூர்யா, கார்த்திக் இருவருக்கும் தங்கை தான் பிருந்தா. சிவகுமார் தன் மகளை சினிமாவிற்குள் கொண்டு வரவில்லை. பிருந்தாவும் படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார். பின் இவரும் சமீப காலமாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் பாடகி என்பதே பலரும் அறியாத ஒன்று. இதுவரை இவர் பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சசி, ஓ2 போன்ற பல படங்களில் பாடி இருக்கிறார். அதேபோல் கடந்த ஆண்டு வெளிவந்த பிரம்மாஸ்டரா படத்தின் மூலம் இவர் டப்பிங் கலைஞர் ஆனர்.

பிருந்தா குறித்த தகவல்:

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த இந்த படத்தில் ஆலியா பட், ரன்பீர், அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரன் ஜோகர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் தமிழ் வர்சனில் நடிகை ஆலியா பட்டுக்கு பிருந்தா தான் டப்பிங் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மணிரத்தினம் படம்:

இந்த நிலையில் பிருந்தா நடிகையாகும் வாய்ப்பை நிராகரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் மாதவன், சிம்ரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த ரோலில் நடிக்க முதலில் சிவகுமாரின் மகள் பிருந்தாவிடம் கேட்டிருக்கிறார்கள்.

பிருந்தா நடிக்க மறுத்த காரணம்:

இந்த வாய்ப்பை அப்போது மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்த சுதா மூலம் தான் பிருந்தாவிற்கு கிடைத்திருக்கிறது. ஆனால், தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று பிருந்தா நிராகரித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரனை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்ரனுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒருவேளை இந்த படத்தில் பிருந்தா நடித்திருந்தால் அவரும் தன்னுடைய அண்ணன்களைப் போல் பிரபலமான நடிகையாகி இருக்கலாம். தற்போது இந்த தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement