இது சிவகார்திகேயனின் முதல் படமாக இருந்திருக்கும். கைவிட பட்ட படம். பெண் இயக்குனர் ட்வீட். வீடியோ இதோ.

0
20085
sivakarthikeyan
- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்ய இருந்தது என்னுடைய படம் மூலம் தான் என்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டீவீட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பாண்டிராஜின் மெரினா என்ற படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவு கொழுக் முழுக் என்று மாறிய ஜில்லுன்னு ஒரு காதல் குழந்தை.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ரசிகை ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இடம் குறள் 786 குறும்படத்தை ஏன் இன்னும் ரிலீஸ் பண்ண வில்லை? எப்போது ரிலீஸ் செய்வீர்கள்? என்று கேட்டு ட்விட்டரில் கேள்வியெழுப்பினார். அந்த ட்வீட்டை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது, அது குறும்படம் இல்ல. அது சிவகார்த்திகேயனுடன் நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டிய படம்.

நான் தான் அவரை ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகம் செய்ய வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. அதற்கு பிறகு தான் அவர் மெரினா படத்தில் நடித்தார். குறள் 786 படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் அபிநயா தான் ஹீரோயினியாக நடிக்க இருந்தது. நான் அவருடன் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் குறள் 786 படம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று பதிலளித்துள்ளார். தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் அவர்கள் கோலிவுட்டில் நுழைந்த எட்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலைமையில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறள் 786 படத்தை எடுத்தால் சிவகார்த்திகேயன் நடிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதோடு சிவகார்த்திகேயன் அவர்களே புதுமுகங்களை கோலிவுட்டில் அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அது என் அம்மா இல்லை. தனது தாய் குறித்து வெளியான வீடியோவிற்கு சிரஞ்சீவி விளக்கம்.

கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பின் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த “ஹீரோ” படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது சிவர்கார்த்திகேயன் அவர்கள் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement