சோப்பு நுரையை ஆடையாக மறைத்து துப்பாக்கி பட நடிகையின் சேட்டையான போஸ்.

0
14747
akshara

சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அந்த அளவிற்கு பிரபலமடைந்து விடுவது இல்லை. ஆனால், ஒரு சில துணை நடிகைகள் கவர்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் நடிகை அக்ஷரா கௌடாவும் ஒருவர். இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் முதன் முறையாக இணைந்த துப்பாக்கி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் நடிகர் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. விஜய், காஜல், அகர்வால், வித்யுத் ஜமால், ஜெயராம், சத்யன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூர் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் இவர் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.மேலும், இவர் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்குடன் காதலில் இணைத்துப் பேசப்பட்டார்.

- Advertisement -

ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா. இறுதியாக கன்னடத்தில் பஞ்சதந்திர என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான மன்மதுடு 2 படத்திலும் நடித்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-18.png

தற்போது திருவிக்ரமா என்ற ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் நடிகை அக்ஷரா கௌடா. மாடல் நடிகை என்பதால் இவரது சமூக வலைத்தளம் முழுக்க படுகவர்ச்சியான புகைப்படங்களுக்கு நிரம்பி வழிகிறது. மேலும், பட வாய்ப்புகளை பிடிக்க அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சோப்பு நுரையால் மூடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement