இது யார் வீடு தெரியுதா ? பிரபல மாஸ் நடிகரின் வீட்டின் முன் ஜி பி முது வெளியிட்ட வீடியோ.

0
959
gp
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இவரும் ரவுடி பேபி சூர்யா என்பவரும் இணைந்து போட்ட கூத்துக்கள் ஏராளம். இதனால் தனது குடும்பத்தில் கூட பிரச்சனை வந்ததாக ஜி பி முத்து கூறி இருந்தார்.ஆனால், தற்போது இவருக்கும் ரௌடி பேபிக்குமே மோதல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

டிக் டாக் தடை செய்யப்பட்டதால், டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகளை பதிவிட துவங்கினர். அந்த வகையில் ஜி பி முத்துவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். அவ்வளவு ஏன் டிக் டாக்கை விரைவில் மீண்டும் கொண்டு வாருங்கள். தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு கூட வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டார் ஜி பி முத்து.

- Advertisement -

இந்நிலையில் ஜி.பி.முத்து விஜயகாந்த் வீட்டு முன்பு நின்றுக்கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ‘நண்பர்கள் நான் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பு நிக்கிறேன்.ரொம்ப நாள் பாக்கனும்னு ஆசை.அன்னாச்சிய பாக்கமுடில ஆனா அவர் வீட்டை பாத்துட்டேன்’ என பேசி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜி பி தான் படத்தில் நடிக்கப்போவதாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடக்கது.

சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்ஜி.பி முத்து.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் . தனது இன மக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதாக, வனவேங்கைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஜி.பி.முத்துவுக்கு எதிராக தூத்துக்குடி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஜி பி முத்து, குறிப்பிட்ட பிரிவினர் குறித்து அவதூறாக பேசி வந்ததால். முதல்வர் தனிப்பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அப்புகார் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில், உடன்குடியில் இருந்த ஜி.பி.முத்துவை புதன்கிழமை குலசேகரபட்டினம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement