சூர்யாவின் கங்குவா கிளிம்ஸ் வீடியோவை ப்ளூ சட்டை ]மாறன் விமர்சித்து பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. அதன் பின் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது.
சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணி
இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
Born of fire and spirit, the king arrives… 🔥
— Studio Green (@StudioGreen2) July 22, 2023
Watch a glimpse of his story in the language of your choice! #GlimpseOfKanguva – Releasing at 12:01 AM
Experience it in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi & English in a single video.@Suriya_offl @DishPatani @directorsiva… pic.twitter.com/BdqkIubnF6
படம் குறித்த தகவல்:
இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். அதோடு இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுகிறது.
படத்தின் கிளிம்ஸ் வீடியோ:
இந்த படம் 10 மொழிகளில் வெளியாகயிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து விதமான கெட்டப்பில் நடிக்கிறார். தற்போது கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இந்த நிலையில் இந்த வீடியோ விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அடேங்கப்பா, பில்டப் ஓவரா இருக்கு. கிலிம்ஸ் போஸ்டருக்கு மூணு போஸ்டர். அது என்ன சட்டை? சட்டைக்குள் இன்னொரு சட்டை என்று தமிழன் படத்தில் வெளிவந்த விஜயின் காமெடியை பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.