‘KKK2’ – வில் டிக் டாக் பிரபலங்களுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி. இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ?

0
1522
kanakanum
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் நிறைந்திருக்கும். இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே அதற்கு பிறகு வந்த கல்லூரி என்ற இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கனா காணும் காலங்கள் சீசன் 2 ப்ரோமோ:

அது மட்டுமில்லாமல் அதற்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியிலும், அதிக எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர். மேலும், புத்தம் புது பொலிவுடன், புதுமுக நடிகர்களுடன் கனா காணும் காலங்கள் சீசன் 2 ப்ரோமோ வெளியாகி உள்ளது. மேலும், இந்த சீரியல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர். டிவியில் ஒளிபரப்பாகி இருந்தால் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

டிக் டாக் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளித்த விஜய் டிவி:

இந்நிலையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலங்கள் பலர் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய சோஷியல் மீடியாவில் வெளியாகும் வீடியோக்களின் மூலம் தான் நடிகர்கள் அதிகம் நடித்து வருகிறார்கள். சோசியல் மீடியா மூலம் பிரபலமான பல பேருக்கு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது.

-விளம்பரம்-

டிக் டாக் பிரபலம் தீபிகா:

மேலும், இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, விஜய் டிவியில் வந்த கனாக்காணும் காலங்கள் சீரியலை நான் வேகமாக ஓடிச்சென்று பார்த்தேன். அந்த அளவிற்கு இந்த சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், தற்போது அந்த சீரியலில் நடிக்கப் போகிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இந்த சீரியலில் அபி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் பிரபலம் ராஜா வெற்றி பிரபு:

இவரின் பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் டிக் டாக் செயலியில் பல்வேறு ரீக்கிரியேஷன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். அதேபோல் இந்த சீரியலில் டிக் டாக் மூலம் பிரபலமான ராஜா வெற்றி பிரபு நடிக்கிறார். இவர் நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை செய்து பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா உலகின் இஞ்சி இடுப்பழகி சிம்ரன் உடன் இவர் நடனமாடிய வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். தற்போது இவரும் கனா காணும் காலங்கள் சீசன் 2ல் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இப்படி இந்த சீரியலில் இன்னும் எத்தனை டிக் டாப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement