பா ஜ க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து குத்தாட்டம் போட்ட கலா மாஸ்டர் (மானாட மயிலாட மொத்த நடுவர்களும் இப்போ இந்த கட்சி தான)

0
3112
kala
- Advertisement -

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கலா மாஸ்டர் வேனில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுவந்தனர். ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியான பா ஜ கவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

-விளம்பரம்-

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : இவங்களுக்கு 36 வயசுனா யாரும் நம்ப மாட்டாங்க – டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.

- Advertisement -

அதே போல பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர் BJP ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கலா மாஸ்டர் வேனில் நடனமாடி தாமரை மலரும் என்று கோஷமிட்டார். மேலும், அண்ணாமலை கையை பிடித்து நடனமாடினார் கலா மாஸ்டர். மேலும், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த நமிதா, குஷ்பூ ஆகியோர் பா ஜ கவில் இனைந்து இந்த தேர்தலில் பா ஜ கவிற்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். அதிலும் பா ஜ கவில் சமீபத்தில் இணைந்த குஷ்பூவிற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement