90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் Anchor டாப் 10 சுரேஷ்ஷின் அழகிய குடும்பம் – இவருக்கு கல்லூரி செல்லும் வயதில் இவ்ளோ பெரிய மகளா.

0
528
Suresh
- Advertisement -

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இருந்தார். மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை ஆல் டைம் ஃபேவரட் ஷோ என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். மேலும், 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் சுரேஷ்.

-விளம்பரம்-

இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். 90 களில் பேவரைட் தொகுப்பாளர் என்றால் இவரை தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுரேஷ். இந்நிலையில் தற்போது சுரேஷ் குமார் அவர்கள் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸ்க்காக தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

2019ல் முடிந்த நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியை எடுக்கச் சொல்லி நெட்பிளிக்ஸ் என்னிடம் ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் ரொம்ப நாள் யோசித்த பிறகு தான் இதை எடுக்க முடிவு எடுத்தேன். அதே போல் 2019ல் டாப் 10 நிகழ்ச்சியும் முடிந்தது. அதற்குப்பிறகு தான் கொரோனா வந்ததால் ஒரு வருடம் எனக்கு கேப் இருந்தது. அப்பவும் என்னுடைய யூடியூப் சேனல்களில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன்.

டாப் 10 நிற்க காரணம் :

அதேபோல் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பண்ண சொன்ன போது ஸ்கிரிப்ட் எல்லாம் நான் தான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டேன். ஏன்னா, டாப் 10 பண்ணும் போதே ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதனால் எனக்கு நெட்ப்ளிக்ஸ்ஸில் பண்ணும்போது எளிதாக இருந்தது. மேலும், என்னுடைய ஸ்டைலில் படம் குறித்த விமர்சனங்கள் இருக்குமே தவிர நேரடியாக படம் நல்லா இல்லை என்று திட்ட மாட்டேன்.

-விளம்பரம்-

ஏன்னா, அது ஒருத்தருடைய கடின உழைப்பு. படம் எடுப்பது எல்லாம் ஒன்னும் ஈஸியான விஷயம் கிடையாது. அது பல பேருடைய உழைப்பு.அதனால் படத்தை விமர்சனமாக கொண்டு போகலாமே தவிர அவர்களை திட்டி கலாய்க்கிற வகையில் எப்போதும் எனக்கு உடன்பாடு கிடையாது. என் வாய்ஸ் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. எப்படி எஸ்பிபி குரல் என்றால் எல்லோரும் கொண்டாடுகிறார்களோ, அதேபோல் 90களின் மனதிலும் நான் பதிந்து விட்டேன்.

சுரேஷ் குடும்பம் :

மேலும், நிகழ்ச்சியை ரேட்டிங் பண்ண வேண்டாம் என்று நான் சொல்லி விட்டேன். அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் இடம் ஒரு டீம் இருந்தது. அவர்களிடம் டிஸ்கஸ் பண்ணி தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். அவர்கள் நான் பேசுவதற்கு எனக்கு முழு உரிமையும் கொடுத்தார்கள்.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்றும் கூறியிருந்த்ர்.இந்த நிலையில் இவர் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement