உத்திர பிரதேசம் மாநிலத்தின் பொது தேர்வு முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இதில் பிராச்சி நிகம் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தைப் பெற்று இருக்கிறார். இவருடன் 19 மாணவ மாணவிகள் ஹை ஸ்கூல் மட்டும் இன்டர்மீடியட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் பெற்று இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் திருவிழா போன்று மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

இருந்தாலும், பிராச்சி குறித்த உருவ கேலி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, பிராச்சிக்கு உடலில் சில காரணங்களால் அவருடைய மேல் உதடுக்கு மேல் முடிகள் தோன்றியிருக்கிறது. இவருடைய புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர் பெண்ணா? இல்லை ஆணா? என்றெல்லாம் மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்திருந்தார்கள். இந்நிலையில் தன்னைக் குறித்த ட்ரோலுக்கு பிராச்சி கூறியிருப்பது, சோசியல் மீடியாவில் என்னை குறித்த கிண்டல் கேலியை பார்க்கும்போது நான் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
பிராச்சி பேட்டி:
நான் முதலிடம் பெறாமல் இருந்திருந்தால் என்னுடைய முகத்தை மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். நான் முதலிடம் பிடித்த பிறகுதான் என்னை ட்ரோல் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் நான் பிரபலமானேன். அதன் பின் தான் நான் என் முகத்தில் முடி இருப்பதையே உணர்ந்தேன். எனக்கு இந்த பிரச்சனை ஒன்பதாம் வகுப்பிலிருந்து தான் அதிகமானது. என்னுடைய வீட்டிலோ, பள்ளியில் யாரும் என்னுடைய முடி வளர்ச்சி குறித்து கிண்டல் செய்வது கிடையாது. சோசியல் மீடியாவினால் தான் நான் பிரபலமானேன்.

உருவ கேலி குறித்து சொன்னது:
எல்லோரும் என்னை அழைத்து பாராட்டு தெரிவிக்கிறார்கள். எங்களுடைய வீட்டிலும் கூட்டமாகவே இருக்கிறது. என்னை பேட்டி எடுக்க பல பேர் வருகிறார்கள். இருந்தாலும் என்னைப் பற்றிய கிண்டல் அதிகமாகி கொண்டே வருகிறது. அதை பற்றி நான் கவலைகொள்ளவில்லை. ஏன், சாணக்யாவே கேலி செய்யப்பட்ட போது அதை பற்றி அவர் கவலைப்படவில்லை. தேவைப்பட்டால் நான் சிகிச்சை செய்து கொள்வேன். ஆனால், இப்போது நான் என்னுடைய படிப்பில் தான் கவனம் செலுத்த விரும்புகிறேன். சில நாட்களுக்கு பிறகு நான் சமூக ஊடகத்தை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்.
பிராச்சியின் தாயார் பேட்டி:
மேலும், என் முகத்தில் இந்த முடி இல்லாமல் இருந்திருந்தால் என்னை ட்ரோல் செய்திருக்க மாட்டார்கள். மக்களுக்கும் என்னை பற்றி தெரிந்திருக்காது. நான் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படித்து என்ஜினியர் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு என்று கூறி இருந்தார். இவரைத் தொடர்ந்து பிராச்சியின் தாயார், எங்களுடைய மகளின் மேல் உதட்டில் முடி வளர்ந்து இருக்கிறது. அதை நாங்கள் அதிகமாக கவனித்ததில்லை. இப்படி என் மகள் இருப்பது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

பார்லருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்ததில்லை. தேர்வு முடிந்ததும் மருத்துவரிடம் செல்லலாம் என்று நினைக்கும் போது மக்கள் இதை பெரிதாகி விட்டார்கள். எங்கள் மகளின் திறமையை விட அவருடைய உடல் தோற்றத்தில் மக்கள் கவனம் செலுத்தி போட்ட கருத்து கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. இருந்தாலும் நாங்கள் எங்களுடைய மகளிடம் இதைக் குறித்து விளக்கமாக பேசினோம். அவர் மனது பாதிக்கப்படாத அளவிற்கு தைரியம் கொடுத்தோம். அவள் தன்னுடைய படிப்பில் தான் அதிக கவனம் செலுத்த இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.






