விஜயுடன் தங்கையாக நடிக்க ஆசைபட்ட திருநங்கை. விஜய் சொன்னது இது தானாம்.

0
20950
Vijay
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதல் முறையாக இந்த தர்பார் படத்தின் மூலம் இணைந்து உள்ளார்கள். இந்த தர்பார் படம் கடந்த வாரம் வெளி வந்தது. பதினோரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். மேலும், லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

அதோடு படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி தான். ரஜினிகாந்தின் தர்பார் படத்தை ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தர்பார் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கண்ணுல திமிரு காட்டியவர் திருநங்கை ஜீவா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறார். இவரிடம் இந்த படம் குறித்து பேசிய போது அவர் கூறியது, சினிமா என்பது அனைவருக்கும் சவாலான மேடை தான். அதிலும் திருநங்கைகள் நடிகர்களாக நடிக்கும் போது மிகவும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. சினிமா உலகில் திருநங்கையாக நான் ஆரம்ப கட்டத்தில் நிறைய அவமானங்களை சந்தித்தும், பல கஷ்டங்களை அனுபவித்தும் உள்ளேன். திருநங்கை என்பதை சினிமா தவறான முறையில் சித்தரித்துக் கொண்டு இருந்தது.

- Advertisement -

இந்த நிலை சமீப காலமாக இந்த எண்ணத்தை சினிமா உலகம் மாற்றிக் கொண்டு வருகின்றது. இப்போது சினிமாவில் மட்டும் இல்லாமல் சமூகத்திலும் திருநங்கைகள் மீதான தவறான பார்வையை மாற்றி வருகின்றார்கள். மேலும், டாக்டர், வக்கீல், அரசியல் என எல்லா துறைகளிலும் எங்களுக்கான அதிகாரத்தைக் கொடுத்து வருகிறார்கள். சர்க்கார் படத்தின் சமயத்தில் நான் ஏ ஆர் முருகதாஸ் சார் கிட்ட இந்த படத்தில் நடிக்க எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு இருந்தேன். அப்போது தான் நான் விஜய் சாரை சந்தித்தேன். தர்மதுரை படத்தில் நான் நடித்ததை ஞாபகம் வைத்துக் கொண்டு நீங்கள் தானே அந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது. உடனே நான் உங்களுடன் படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டேன்.

அதற்கு விஜய் சார் ஐ அம் வெயிட்டிங் ன்னு சொன்னார். எனக்கு தலை கால் புரியாமல் செம குஷி ஆகி விட்டேன். வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வரும் போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்தது தளபதி விஜய் அவர்களின் படமும் பாட்டு தான். தளபதி அவர்களின் படத்தில் தளபதியோட தங்கச்சியாகவோ, அக்காகவோ ஒரு படம் நடித்தால் போதும் என் வாழ்நாள் கனவு, ஆசை எல்லாம் நிறைவேறி விடும் என்று கூறினார்.
பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தது. அடுத்த படத்தில் நீங்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று சொன்னார்கள். அப்போது நானும் விஜய் படமா என்று ஆவலுடன் இருந்தேன். அதுக்கப்புறம் தான் தெரிந்தது நான் ரஜினி சாரோட படத்தில் நடிக்கப் போகிறேன்.

-விளம்பரம்-
Advertisement