வீரம் விளையும் மதுரையில் பொங்கல் திருவிழாவின் போது நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண உலககின் பல இடங்களில் இருந்து இருந்து மக்கள் வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டிற்கு எதிரான தடையை நீக்கினார். ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடக்கி தங்களின் வீரத்தை காட்டும் ஜல்லிக்கட்டு வீரர்கள் என இருக்கும் இந்த விழாவில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் ஒருவர் தான் மதுரையை சேர்ந்த திருநககை கீர்த்தனா.
நான் கடவுள் கீர்த்தனா :
இவர் இயக்குனர் பாலா இயக்கி ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திருநங்கையகவே நடித்திருப்பார். இவர் பொட்டபனையூர் பகுதியை சேர்ந்தவர். திருநங்கைகள் பலரும் தற்போது உள்ள சூழ்நிலையில் பல தொழில்களில் சாத்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் திருநங்கை கீர்த்தனா ஜல்லிக்கட்டு காளைகளை மாடுகளையும் வளர்ந்து வருகிறார்.
ஜல்லிக்கட்டில் திருநங்கை :
தற்போது திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து வரும் திருநங்கை கீர்த்தனாவின் காளை கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் தான் முதன் முறையாக வாடிவாசலை தாண்டி அனுப்பு வைத்தார். முதல் போட்டியில் வீரர்களை பறக்க விட்ட அந்த காளை வெற்றி பெற்றது. இதனால் திருநங்கை கீர்த்தனாவை இந்த நிகழ்வு தமிழ் நாடு முழுவதும் திரும்பிப்பார்க்க வைத்து பெருமையை அவருக்கு கொடுத்து.
பயிற்சி:
மேலும் அவர் ஒரு பேட்டியில் கூறுகையில் தன்னுடைய வீட்டில் எல்லோரும் காளைகளை வளர்த்தனர் இதனால் சிறிய வயதில் இருந்தே மாடுகளின் மீது அதீத அன்பு இருந்தது. திருநங்கயாக மாரிய பிறகு வீட்டை விட்டு வந்தேன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட போது மாடு வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. இதனால் என்னுடைய நம்பர்களின் உதவியுடன் மாடுகளை வாங்கினேன். மாடுகளை தினமும் நீச்சல், மண்குத்தல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.
வெற்றி பெற்ற காளை :
சின்ன முத்தையா, பெரிய முத்தையா, கருடன், ருத்ரன், நரசிம்மன் போன்ற வளர்த்து வரும் இந்த மாடுகள் கண்டிப்பாக பெற்றவர்களுக்கு பெருமையை தரும் குழந்தையை போல எனக்கு பெயரை வாங்கித்தரும் என்று கூறினார். இந்த நிலையில் தான் இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இவரது மாடு வெற்றி பெற்றத. சமீபத்தில் இவரது காளை சின்னக்கட்டளையில் நடந்த போட்டியில் திருநங்கை கீர்த்தனா “பெரிய மருது” காளை விருதை வென்றது என்பது குறிப்பிடதக்கது.