திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ். 1.5 கோடி நீதி தந்த பிரபல நடிகர்.

0
1279
ragavalawrance
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கியும், நடித்தும் வெளிவந்த படம் காஞ்சனா. அதில் ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய் மற்றும் சரத் குமார் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து காஞ்சனா படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகம் வெளிவந்தது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த காஞ்சனா படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து தற்போது இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்கிறார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் இதுவரை ஹிந்தியில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

90 கால கட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழில் கூட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 என்ற படத்தில் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர் காஞ்சனா படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தில் அக்சய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார். மேலும், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார். நடிகர் அமிதாப் பச்சன் திருநங்கையாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ‘லட்சுமி பாம்’ என்று பெயர் வைத்து உள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராகவா லாரன்ஸ் இடம் கேட்காமலே அக்ஷ்ய் குமார் வெளியிட்டதால் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின் இந்த பிரச்சனை முடிவடைந்தது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் திருநங்கைகளுக்கு வீடு கட்ட நிதி உதவியாக 1.5 கோடி ரூபாய்யை நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் இடம் வழங்கியுள்ளார். தற்போது இவர் நிதி வழங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அக்ஷய் குமாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement