டிக்கெட் இருந்து உள்ளே நுழைய மறைக்கட்ட நரிக்குறவ மக்கள் – நேரில் சென்று கொட்டாச்சியர் செய்த Thug சம்பவம்

0
230
- Advertisement -

கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி, விடுதலை படத்தின் மூலம் தான் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார், ஷிவிதா நாயர், ரோஷினி, பிரகிடா, ரேவதி ஷர்மா, சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். படத்தில் ஒரு கிராமத்தில் அமைச்சர் ஒருவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை தனக்கு சொந்தமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்.

- Advertisement -

கருடன் படம்:

அந்த இடத்தின் உடைய மூல பத்திரம் கோயில் டிரஸ்ட் இடம் இருக்கிறது. அவர் அந்தப் பத்திரத்தை எப்படியாவது கைப்பற்றி தன்வசம் ஆக்க பல திட்டங்கள் போடுகிறார். இன்னொரு பக்கம் அதே ஊரில் சசிகுமார், உன்னி முகுந்தன் என இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இருவருமே இணைபிரியாத நட்புடன் இருக்கிறார்கள். உன்னியின் நிழலாகவும், அவருக்கு விசுவாசமாக இருப்பவர் தான் சொக்கன் சூரி. மேலும், அமைச்சர் போடும் திட்டத்தை இந்த இரண்டு நண்பர்கள் முறி அடித்தார்களா? இதில் சூரியின் பங்கு என்ன? அமைச்சர் ஏன் அந்த நிலத்தை அடையப் பார்க்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.

படம் குறித்த தகவல்:

படத்தில் சூரி, சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் வெளியாகி முதல் நாளில் மட்டுமே 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடலூரில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு கருடன் படத்தை பார்க்க திரையரங்கு ஒன்றிற்கு சென்றிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடலூரில் நடந்த சம்பவம்:

அங்கு திரையரங்க நிர்வாகம், நரிக்குறவர் மக்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் திரையரங்கினுள் அவர்களை செல்ல அனுமதிக்கவும் இல்லை. இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை அடுத்து நரிக்குறவர் மக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். உடனே வட்டாட்சியர், நரிக்குறவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

வட்டாசிரியர் நடவடிக்கை :

அதற்குப் பிறகு நரிக்குறவர் மக்களுக்கு கருடன் படம் பார்க்க டிக்கெட்டுகளை வாங்கித் தந்து அவர்களை தியேட்டருக்குள் விட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு திரையரங்கின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கடலூரில் நடந்து இருக்கும் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement