மன்சூர் விசயத்துக்கு கொதிசீங்க இப்போ ஏன் கம்முன்னு இருக்கீங்க – திரிஷாவிற்கு ரசிகர்கள் கேள்வி.

0
386
- Advertisement -

கூவத்தூர் அதிமுக பிரச்சனையில் திரிஷாவை இழுத்துவிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக,அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

-விளம்பரம்-

இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக வதந்திகள் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

- Advertisement -

கூவத்தூர் சர்ச்சை:

அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்திருந்தார். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க. நான் என்ன சொல்றது என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மன்சூர் அலி கான் பேட்டியில் த்ரிஷாவை குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

மன்சூர் அலிகான் மீது புகார்:

இதனால் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். பின் இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து இருந்தது. இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

பின் விசாரணையில் மன்சூர் அலிகான் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறார். இன்னொரு பக்கம் திரிஷா, மன்சூர் அலிகானை திட்டியும், கண்டித்தும் இருந்தார். பலரும் திரிஷாவுக்கு தான் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். அதன் பின் மன்சூர் அலிகான் தன் மீது வீண்பழி சுமத்திய திரிஷா மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருந்தார். அப்போது விசாரித்த நீதிபதி மன்சூர் அலிகானை கண்டித்து இருந்தார்.

இப்படி இந்த சர்ச்சை முடிந்த பாடில்லை மீண்டும் திரிஷாவை குறித்து அதிமுக உறுப்பினர் பேசி இருப்பது கண்டனத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.இந்த விவாகரத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சேரன், ஏ.வி ராஜுவின் இந்த பேச்சை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஷால், கார்த்தி, நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், சம்மந்தப்பட்ட திரிஷா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் பலர் மன்சூர் அலிகான் விஷயத்தில் கொதித்த நீங்கள் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கு திரிஷா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement