மலையாள பெண் கவிஞர் வைத்த கோரிக்கைக்கு இயக்குனர் ஆர் வி உதயகுமார் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் ஆர் வி உதயகுமார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகர், பாடல் ஆசிரியரும் ஆவார். இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல குறும்படங்களை இயக்கியிருந்தார்.
அதற்குப்பின் இவர் உரிமை கீதம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்காரவேலன், எஜமான், பொன்னுமணி போன்ற பல படங்களை கொடுத்திருக்கிறார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக இவர் கற்க கசடற என்ற படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
ஆர் வி உதயகுமார் திரைப்பயணம்:
அதற்குப் பின் இவர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் உதயகுமார் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது புதுமுக நடிகர்கள் சேர்ந்து நடித்திருக்கும் படம் என் சுவாசமே. மலையாள ஒளிப்பதிவாளர் மணி பிரசாத் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சஞ்சய், அர்ஜுன் குமார், ஜனனி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
விழாவில் ஆர் வி உதயகுமார் சொன்னது:
இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்து கொண்ட மலையாள பெண் கவிஞர் ஸ்ரீவித்யா, மலையாளத்தில் தலைசிறந்த படங்களும், படைப்பாளிகளும் இருக்கிறார்கள். பெண்களை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று இயக்குனருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இவரை அடுத்து விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர் வி உதயகுமார், ரசிகர்களை கவர தான் பாடல் காட்சிகளில் அப்படி காட்டப்படுகிறது.
பெண்கள் குறித்து சொன்னது:
பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். நாங்க காட்டுவதை விட பெண்களே நிறைய காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களே நீங்க எதுக்கு இப்படி அவுத்து போட்டு காட்டுறீங்க என்று நீங்க தான் கேக்கணும். அதோடு மலையாளத்தில் தான் பிட்டு படம் அதிகமா காமிச்சாங்க. பிட்டு படத்தை வைத்து பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் கண்டனம்:
சினிமாவை கூட காப்பாற்றி விடலாம். ஆனால், சோசியல் மீடியாவில் பெண்கள் முழு உடம்பு தெரியும்படி புகைப்படம், வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதை எடு பார்ப்பவர்களை எப்படி நாம் காப்பாற்ற முடியும். அதைப் பார்க்கும்போது மூட கூட மனசு வரமாட்டேங்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி ஆர் வி உதயகுமார் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.