ஆடுகளம் படத்தில் முதலில் நடிச்சது இந்த நடிகை தானா ? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

0
57512
aadukalam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் தனுஷ், டாப்ஸி பண்ணு, கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கேபி கருப்பு எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பார். தனுஷின் சினிமா வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமாக இந்த படம் அமைந்தது. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் அவர்கள் தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு கமர்சியல் படம். சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்ட இந்தப்படம் மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை கண்ணுக்கு முன்னே நிறுத்தியது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : கமல், சூர்யா, தனுஷையே மிஞ்சிய நயன். கொரோனா பாதிப்பிற்கு கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

அதிலும் ‘வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா’ என்னும் பாடல் தான் செம ஃபேமஸ் ஆனது என்று சொல்லலாம். இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் நடிகை டாப்ஸி நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் நடிகை டாப்ஸியின் முதல் படமும் ஆடுகளம் தான். இந்நிலையில் இந்த படத்தில் முதலில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் திரிஷா தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் பாதி வரை நடித்து இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு இந்த படத்திற்கு அவர் செட் ஆகவில்லை என்பதால் திரிஷாவை மாற்றிவிட்டு டாப்ஸியை நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன். சொல்லப்போனால் வெற்றிமாறனின் புத்திசாலித்தனம் தான் இந்த படம் வெற்றி அடைந்ததற்கு காரணம். இந்த படத்தில் பாதிவரை நடிகை திரிஷா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பின் திடீரென்று இந்த படத்திற்கு திரிஷா ஒத்துப்போக வரமாட்டார் என்பதை உணர்ந்து உடனடியாக திரிஷாவை நீக்கிவிட்டு நடிகை டாப்சி நடிக்க வைத்தார் இயக்குனர். ஆரம்பத்திலேயே நடிகை த்ரிஷாவை இந்த படத்தில் நடிக்க வைக்க வெற்றிமாறனுக்கு உடன்பாடு இல்லையாம். நடிகர் தனுஷ் சிபாரிசு செய்ததனால் தான் திரிஷாவை நடிக்க வைத்ததாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : விஜய பாஸ்கர் சில நாள் பேட்டிகொடுக்காமல் போனததற்கு காரணம் இந்த 7 ஆம் அறிவு மீம் தானா?

மேலும், இந்த படத்தில் திரிஷா நடித்திருந்தால் இந்த அளவுக்கு வெற்றி பெறுமா?? என்பது கொஞ்சம் கேள்விக்குறி தான். தற்போது ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை த்ரிஷாவுக்கு பரமபதம், கர்ஜனை, ராங்கி, சுகர் என அடுத்தடுத்து பல படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது.

Advertisement