சிறப்பாக நடந்த ரஜினி பேரனின் காது குத்தி, பெயர் சூட்டும் விழா-யார் பெயர் வைத்திருக்காங்க தெரியுமா?

0
1646
- Advertisement -

ரஜினிகாந்தின் பேரனுக்கு காது குத்தி பெயர் சூட்டு விழா நடந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ரஜினி அவர்கள் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். இவர் தன் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து இருந்தார்.

- Advertisement -

சௌந்தர்யாவின் முதல் குழந்தை :

பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். சில நாட்களிலில் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள்.

சௌந்தர்யா திருமண வாழ்க்கை:

ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். பின் சௌந்தர்யா விவாகரத்து வாங்கி முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பதும் போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

சௌந்தர்யா இரண்டாம் திருமணம் :

மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு தான் சௌந்தர்யாவிற்கு மகன் பிறந்து இருந்தார். அவருக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் பேரனும் சௌந்தர்யாவின் மகனுக்கு காது குத்தும் விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழா சௌந்தர்யாவின் கணவன் விசாகனின் சொந்த ஊரான சூலூரில் காதுகுத்தி பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ரஜினி பேரன் காது குத்தும் விழா:

மேலும், இந்த குழந்தைக்கு ரஜினி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வரவில்லை என்றாலும் அவருடைய அண்ணன் சத்திய நாராயணன் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement