பிக்பாஸ் 8ல் தன் காதலியோடு களமிறங்கப் போகும் 2K கிட்ஸின் சர்ச்சைத் தலைவன் – யார் அந்த பிரபலம்?

0
184
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை கடந்திருக்கிறது. இந்த ஏழு சீசன்களை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, சச்சரவு, கலவரம் தான்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அன்பு மழை பொழிந்தாலும் இரண்டே நாட்களில் அடிதடியில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கடந்த கடைசி ஏழாவது சீசனிலும் ஒவ்வொரு நாளும் ரணக களமாக இருந்தது. குறிப்பாக, பிரதீப் ஆண்டனி, மாயா செய்தது எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே சமீபத்தில் தான் பிக்பாஸ் கொண்டாட்டமும் முடிவடைந்தது. மேலும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போது என்று கேட்க தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

பிக் பாஸ் சீசன் 8:

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடனே பிக்பாஸ் சீசன் 8 தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த எட்டாவது சீசனில் யூடியூப் பிரபலமும், நடிகருமான டிடிஎப் வாசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவருடைய காதலி சோயாவும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சோயா ஷாலின் குறித்த தகவல்:

சோயா ஷாலின் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக கண்ணகி படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.மேலும், இந்த நிகழ்ச்சியில் இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

நிகழ்ச்சியில் காதல் ஜோடி:

இன்னொரு பக்கம் இவர் தன்னுடைய காதலன் டி டி எஃப் வாசனுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறை வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரையுமே பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக போட்டாள் நிகழ்ச்சி கலகட்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆக மொத்தம், பிக்பாஸ் சீசன் 8ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisement