‘சாலையில் டிடிஎஃப் தொல்லை இனி இல்லை’ லைசென்ஸ் ரத்து – இனி இத்தனை ஆண்டுகளுக்கு பைக்கை ஓட்ட முடியாது.

0
1343
TTF
- Advertisement -

யூடுயூபில் பைக் சாகசங்கள் செய்து 2k கிட்ஸ் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் TTF வாசன் பைக் விபத்தில் சிக்கிஇருக்கும் விஷயம் தான் கடந்த வாரங்களாக பேசுபொருளாகி இருக்கிறது. என்னதான் இவருக்கு 2k கிட்ஸ் ஆதரவு இருந்தாலும் இவர் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று தான் பலர் கூறி வருகின்றனர். இவர் மீது பல முறை சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவர் அடிக்கடி பொது சாலையில் விதி மீறல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து கோர விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் அவருக்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ttf வாசன் ரசிகர்கள் சிலர் TTF வாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று ttf கின்னீஸ் கூறிவந்தனர்.

- Advertisement -

அதே சமயம் பெரும்பாலான மக்கள் பலர் இது போன்று போது சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேணும் என்றும் இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்றும் காவல் துறை பரிந்துரை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிஇருந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று விடியற்காலையில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ttf ற்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் ttf. ஆனால், அங்கேயும் அவரது ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முனுவை விசாரித்த நீதிபதி டிடிஎப் வாசனின் youtube தளத்தை மூடிவிட்டு அவரது பைக்கை எரித்து விடவேண்டும் எனவும் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்தாண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2033ஆம் ஆண்டு வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement