மூன்று ஹீரோக்கள், மூன்று கதை – எப்படி இருக்கிறது இருகப்பற்று ? – முழு விமர்சனம் இதோ.

0
1965
- Advertisement -

இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இறுகப்பற்று. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், ஸ்ரீ, சானியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

திருமணம் ஆகி கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் உளவியல் ஆலோசகராக ஷ்ரத்தா இருக்கிறார். இவர் இதை செய்வதற்கு காரணம் இவருக்கும் இவருடைய கணவர் விக்ரம் பிரபுவுக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர் உளவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சனையை தடுத்து விடுகிறார். இதுவே ஒரு கட்டத்தில் இவர்களுக்கு மத்தியில் பிரச்சனையாக உருவாகிறது.

பின் இரண்டு வெவ்வேறு ஜோடிகள் ஷ்ரத்தாவிடம் ஆலோசனைக்கு வருகிறார்கள். ஐடி துறையில் பணியாற்றும் விதார்த், அவருடைய மனைவி அபர்ணதியிடம் விவாகரத்து கேட்கிறார். காரணம், குழந்தை பிறப்புக்கு பிறகு அபர்ணதி உண்டாகி விட்டதாக காரணம் சொல்லி விதார்த் விவாகரத்து கேட்கிறார். இன்னொரு பக்கம், காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ -சானியா இருவருக்கும் தினமும் சண்டை வருகிறது.

-விளம்பரம்-

இதனால் இருவருக்கும் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. இதிலிருந்து இருவரும் பிரிய
நினைக்கிறார்கள். இறுதியில் இவர்களை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி ஷ்ரத்தா மீட்டெடுக்கிறார். ஷ்ரத்தா-விக்ரம் பிரபு கிடையில் பிரச்சனை ஏற்படுகிறதா? இவர்கள் மூன்று ஜோடிகளும் எப்படி தங்களுடைய திருமண வாழ்க்கை பிரச்சினையிலிருந்து மீள்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்த்து இருக்கிறார்கள்.

வெவ்வேறு குடும்ப பின்னணியை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியோருக்கு மத்தியில் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்கு கொடுக்கும் தீர்வை வைத்து தான் இயக்குனர் கதையை கொடுத்து இருக்கிறார். உறவுகள், உணர்வுகள் உளவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஆனால் உறவுகளுக்குள் இடையில் வரும் சிக்கல்களை காண்பிப்பதாக சொல்லி சில மோசமான காட்சிகளை கொடுத்து இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது.

அதோடு படம் முழுவதும் உணர்வுபூர்வமாக இல்லாமல் நிறைய நகைச்சுவையை இயக்குனர் கொண்டு சென்றிருப்பது சிறப்பாக இருக்கிறது. திருமண உறவுகளுக்கு இடையில் அன்பும் அக்கறையும் இருந்தாலும் அதை மனவிட்டுப் பேசாமல் போவது தான் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால், சில பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் தீர்வுகள் தான் செட்டாகவில்லை. பெண்கள் குண்டாக இருப்பது ஒரு பெரிய பிரச்சனை போல படத்தில் காண்பித்திருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் வெளிப்படையாக காண்பிப்பதாக சொல்லி இயக்குனர் சில மோசமான வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மறைந்த நடிகர் மனோபாலா சிறப்பாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் உடைய இசை உணவுப்பூர்வமான காட்சிகளுக்கு பலத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் திருமண பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயக்குனர் கொடுத்திருக்கும் தீர்வு பாராட்டுக்குரிய ஒன்று இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

திருமண பந்தத்தில் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது

இயக்குனர் கதையை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

சில மோசமான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

மொத்தத்தில் இறுகப்பற்று- ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடையும்

Advertisement