கொள்ளை வழக்கில் இரண்டு டிவி நடிகைகளை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு தொழில்கள் தொடங்கியது போலவே சினிமா தொழிலும் முடங்கியிருக்கிறது. சினிமாவை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் கலைஞர்கள் என்று பலர் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் கடும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மும்பையின் ஆரே காலனியில் உள்ள கோரேகானில் பேயிங் கெஸ்ட் விடுதி இருக்கிறது. இதில் டிவி நடிகைகள் ஒரு சிலருடன் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். பேயிங் கெஸ்ட்டில் ரூ .3 லட்சம் திருடு போய்யுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் சுரபி மற்றும் மொசினா ஆகி இரு டிவி நடிகைகள் தான் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இரு நடிகைகளும் பணத்துடன் தப்பி ஓடியதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.
சுரபி மற்றும் மொசினா ஆகி இரு நடிகைகளும் சவ்தான் இந்தியா மற்றும் க்ரைம் ரோந்து போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர்களே திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளனர். சுரபி மற்றும் மொசினா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 23 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
லாக்டவுன் பிரச்சனை காரணமாக மும்பையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பணத்திற்கு வழி இல்லாமல் இப்படி செய்துள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த இரண்டு நடிகைகளும் கொரோனா பிரச்சினை காரணமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்ததை அறிந்து இவர்களை விபச்சார கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.