பிசினஸில் கொடிகட்டி பறக்கும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் – சீரியல் முதல் பிக் பாஸ் பிரபலம் வரை வெளியான பட்டியல்

0
197
- Advertisement -

நடிப்பில் மட்டுமில்லாமல் பிசினஸிலும் கொடிகட்டி பறக்கும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டும் இல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரை பிரபலங்களை போல சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் தனியாக பிசினஸ் தொடங்கி வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர்கள் நடத்தி வரும் தொழில் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சந்தோஷி:

சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சந்தோஷி. இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று சின்னத்திரையில் செட்டில் ஆகிவிட்டார். அதற்குப் பின் இவர் சீரியல்களிலும் நடிக்கவில்லை. பின் இவர் ஒப்பனைக் கலைஞராக இருக்கிறார். தற்போது இவர் சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ நடத்தி மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்து வருகிறார்.

- Advertisement -

ஸ்ரீகுமார்:

சின்னத்திரை சீரியலின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரீகுமார். இவர் ஆனந்தம், அகல்யா, மலர்கள், பந்தம், இதயம், யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ‘வானத்தைப்போல’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பிரித்திவிராஜ்:

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் பிரித்திவிராஜ் ஒருவர். இவரை எல்லோருமே ‘பப்லு’ என்றுதான் அழைப்பார்கள். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், துணை கதாபாத்திரங்கள் எல்லாம் நடித்திருக்கிறார். அதேசமயம், இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான அரசி, வாணி ராணி, கண்ணானே கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் சென்னையில் புறநகரில் பல ஓட்டல்களை சொந்தமாக நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

வனிதா விஜயகுமார்:

சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் விஜயகுமார்- மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்திருந்தாலும் இடையில் இவர் பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் படங்கள், சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக் நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவர் ஆடைகளை வடிவமைத்து தருவது தொடர்பான வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்ருத்திகா:

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருந்தவர். அதற்குப் பிறகு இவர் நடிக்கவில்லை. பின் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதற்குப் பிறகு சோசியல் மீடியாவில் சுருதிகா பிசியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக அழகு சாதன பிராண்டுகளை நடத்தி வருகிறார்.

மகாலட்சுமி:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மகாலட்சுமி. இவர் கடந்த ஆண்டு தான் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய கணவர் உடன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சஞ்சீவ்:

சின்னத்திரை நாயகன் சஞ்சீவ். இவர் சின்னத்திரை சீரியல் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இருந்தும், இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவர் ‘வானத்தைப்போல’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சொந்தமாக காபி ஷாப் தொழிலையும் நடித்து கவனித்து வருகிறார்.

Advertisement