எங்க கிட்ட வாங்குன பணத்த திருப்பி கொடுக்க – சந்திரயான் 3 வெற்றியால் அவேசமான இங்கிலாந்து செய்தி வாசிப்பாளர்.

0
1727
- Advertisement -

ஜூலை 14ஆம் தேதி அன்று இந்தியாவின் சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ  சந்திராயன் 3 யை நிலவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் நிலவின் தென்பகுதியில் வெற்றி காரணமாக இறங்கி வரலாற்று சதைனையை செய்தது. அதன் பின் நேற்று இரவு 9 மணியளவில் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து காலடி பதித்து தனது ஆராய்ச்சியை தொடங்கியது. இந்த வரலற்று சாதனைக்கு உலகில் உள்ள பெரிய தலைவர்கள் உட்பட சினிமா பிரபலங்களும் தனது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

பிரபலங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைவரும் அதனை பாராட்டி வந்தனர். இந்த நிலையில் ஒரு இங்கிலாந்து செய்தி வாசிப்பாளர் ஒருவர் இந்தியாவை பற்றி சர்ச்சைக் கூறிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் பேட்ரிக் கிறிஸ்டி. அவர் நேற்று பணிபுரிந்து வந்த தொலைக்கட்சியில் சந்திராயன் 3 பற்றி அதன் தொலைகாட்சியில் பேசிய வீடியோஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவில் இந்தியா நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரை  இறங்கியதற்காக இந்தியாவை நான் வாழ்த்த விரும்புகிறேன். ஆனால், 2016 – 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகளை பணத்தை இந்திய திருப்பி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு 57 மில்லியன் பவுண்டு பணத்தை மீண்டும் தர இருக்கிறோம். ஆனால், பிரிட்டிஷ்க்கு வரி செலுத்துவோர் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

விண்வெளியில் ஆராய்ச்சி செய்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்காக விண்கலத்தை உங்களால் அனுப்ப முடிகிறது என்றால், இனிமேல் உங்கள் தேவைக்காக நீங்கள் எங்களிடம் பணம் கேட்டு வரக் கூடாது. விண்வெளி திட்டம் உள்ள நாடுகளுக்கு நாங்கள் இனிமேல் பணம் தர மாட்டோம். இந்தியாவில் 229 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் ஆனால் இந்திய அரசு அதை பற்றி கவலை படவில்லை.

-விளம்பரம்-

ஐக்கிய நாடுகள் அறிக்கை படி, இது உலகில் எங்கும் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். வறுமையில் வாடும் இந்தியர்களுக்கு, அவர்களின் சொந்த அரசாங்கமே கவலைப்படாத போது நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்” என்று கூறி அந்த வீடியோவை சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது சமுக வலைதங்களில் பரவி வருகிறது.

Advertisement