இஸ்லாமிய மாணவரை தாக்கிய விவகாரம் – பள்ளி கல்வி துறை எடுத்த நடவடிக்கை. மாண்வர்களின் நிலை என்ன ?

0
607
- Advertisement -

உத்திரபிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை ஆசிரியை அரைய சொன்ன சம்பவம்  நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்த சமூகத்திற்கு அந்த ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை ஆசிரியை அறைய சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த வீடியோவில் இஸ்லாமிய மாணவனை அறியும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியுள்ளது. இந்நிலையில் சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை அறைய சொன்னதில் மதவாத நோக்கம் இல்லை என அந்த ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார்

- Advertisement -

ஆசிரியர் விளக்கம்:

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இந்த சமூகம் குறித்து அடுத்த விளக்கத்தில் சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாததால் சில மாணவர்களை விட்டு அவனை அறியும்படி சொன்னேன் அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என அவரது பெற்றோரிடமிருந்து அழுத்தம் வந்தது.  நான் மாற்றுத்திறனாளி அதனால் சில மாணவர்களை விட்டு அறைந்தேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்படவில்லை நான் இந்த கிராம மக்களுக்கு ஆசிரியராக சேவை செய்திருக்கிறேன்.

அவர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். மேலும் அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஆசிரியர் பயன்படுத்திய புண்படுத்தும் வார்த்தைகள் குறித்து விளக்கம் அளித்த அவர் முழு சம்பவத்தையும் மதவாத கோணத்தில் திசை திருப்ப வீடியோ எடிட் செய்யப்பட்டது.அடிவாங்கிய பின் அந்த மாணவர் ஒழுங்காக படிக்கவும் வீட்டுப்பாடங்கள் முடிக்கவும் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்தான் என்னை அடிக்க சொன்னார் எங்கள் கிராமத்தில் ஹிந்து முஸ்லிம் பாகுபாடு இன்றி வாழ்ந்து வருகிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து பேசுபவர் இது ஒரு சிறிய பிரச்சனை வீடியோ வைரலான பிறகு தான் இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது இது என்னுடைய நோக்கம் அல்ல மாணவர்கள் அனைவரும் என் குழந்தைகளை போன்றவர்கள் நான் என் தவறை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இது தேவையில்லாமல் ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றப்பட்டது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்வீட் செய்துள்ளனர் இது போன்று தினசரி பிரச்சனைகளை வைரல் ஆக்கினால் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என்று கேட்டுள்ளார் இது குறித்து. ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் முதலில் புகார் கொடுக்க சம்மதிக்கவில்லை ஆனால் தற்போது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அது பதிவு செய்யப்பட்டுள்ளது சுமார் 2 மணி நேரம் தன் மகன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்திருக்கிறார் வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதே சூழ்நிலையில் ஒரு இஸ்லாமிய மாணவரும் ஹிந்து மாணவரும் கட்டு பிடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

தற்காலிகமாக மூட உத்தரவு:

இந்த நிலையில் மாணவன் தாக்கப் பட்டதை அடுத்து விசாரணை நடத்த அப்பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவுவிட பட்டுள்ளது. அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்க படுவார்கள் என்று பள்ளிகல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

Advertisement