பட்டியலின மக்களுக்கு எதிராக விஷால் பட நடிகர் கமெண்ட் – குவிந்த எதிர்ப்புகளால் மன்னிப்பு

0
1533
- Advertisement -

தலித் குறித்து உபேந்திரா பேசிய சர்ச்சையான வார்த்தைக்கு அவர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட திரை உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உபேந்திரா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். பெரும்பாலும், இவருடைய படங்கள் எல்லாம் அதிரடி ஆக்சன் பாணியில் தான் இருக்கும்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவர் கன்னடத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த சத்யம் என்ற படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் உபேந்திரா நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

- Advertisement -

மேலும், சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் உபேந்திரா நடிப்பில் கன்னட மொழியில் வெளியான படம் கப்ஸா. பல கோடி செலவில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஆன உபேந்திரா, சுதீப் நடித்திருந்தார்கள். இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஸ்ரேயா சரண், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரவி பஸ்சூர் இசையமைத்திருக்கிறார்.

கன்னட மொழியில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகர் உபேந்திரா மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, உபேந்திரா அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கட்சி ஒன்று நடத்தி வருகிறார். இந்த கட்சியின் வருடாந்திர நிறைவு விழாவை முன்னிட்டு இவர் சோசியல் மீடியாவில் லைவில் பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

அப்போது அவர் தலித்துகள் பற்றி மரியாதை குறைவான வார்த்தைகளை பேசி இருக்கிறார். அதாவது, ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே தலித்துகள் இருக்கத்தான் செய்வார்கள் என்று பேசி இருக்கிறார். இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். அதற்கு உபேந்திரா, விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கண்டு கொள்ளாமல் இருந்தார்.

பின் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் உபேந்திரா மீதும் புகார் அளித்து எஃப் ஐ ஆர் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனுடைய விபரீதத்தை உணர்ந்த உபேந்திரா அந்த வீடியோவை சோசியல் பக்கத்தில் இருந்து டெலிட் செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நான் எந்தவித உள்நோக்கத்துடனும் பேசவில்லை. பழமொழி சொல்வார்களே அதே போன்று தான் நானும் சொன்னேன். நான் எனக்கு தோன்றியது பேசி விட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மன்னிப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement