இமானை தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு கொடுத்த தமன் – குவியும் பாராட்டுக்கள்

0
1779
Thaman
- Advertisement -

இமான் வரிசையில் தமன் மாற்றுத்திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், எத்தனை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியின் நடுவராக இசையமைப்பாளர் தமன் பங்கேற்று இருக்கிறார். மேலும், கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் புரோகித ஶ்ரீ என்றும் பார்வையற்ற சிறுமி பாடியிருந்தார். அவருடைய குரலில் பாடிய பாடலை கேட்டு அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.

தமன் வாக்குறுதி:

அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் தமனும் அவருடைய பாடலை கேட்டு வியந்து போய்விட்டார். பின் அந்த சிறுமியின் கண் பார்வை குறித்து அவருடைய பெற்றோர்கள் கூறியதை கேட்டு தமன் அழுதுவிட்டார். பின் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று தமன் வாக்குறுதி அளித்திருந்தார். இது அங்கிருந்து அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இவர் ஒரு சிறுவனுக்கு வாய்ப்பளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமன் செய்த செயல்;

அதாவது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களில் கலர் வெடி கோகுல் ஒருவர். இவர் தன்னுடைய அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை பாடியிருக்கிறார். இவர் எளிய குடும்பத்தில் இருந்து வந்தார். இவர் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு கானாவையும் பாடிக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் வரும் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தீபாவளிக்குள் ஒரு மிகப்பெரிய நடிகரின் படத்தில் அவருடைய அண்ணன் பாடல் எழுத, கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக தமன் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இமான் செய்த செயல்:

தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலருமே இசையமைப்பாளர் தமனின் செயலை குறித்து பாராட்டி வருகிர்ரகள். சமீபகாலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் பாட வாய்ப்பு அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். சமீபத்தில் கூட சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு தருவதாக அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement