மரியாதை ரொம்பவே முக்கியம் – சினிமாவில் வாய்ப்பு வந்தும் நடிக்க மறுக்க காரணம் இதான் – வாரணம் ஆயிரம் சூர்யா தங்கை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்.

0
2028
Deepa
- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் தான் தீபா நரேந்திரா. இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். மேலும், இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வந்து இருக்கும். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியா துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பல மாணவர்களுக்கு தன் கணவருடன் சேர்ந்து பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தீபா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எல்கேஜி படிக்கும் போதே பரத நாட்டியமும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஸ்கூல் முடித்துவிட்டு டான்ஸ் கற்றுக்கொள்வது என்பது என்னுடைய வழக்கமாகிவிட்டது. டான்ஸ், பாடுவது எல்லாம் நம்முடைய கேரியருக்கு உதவியாக இருக்குமே தவிர அதனால் நம்முடைய படிப்பெல்லாம் கெட்டுப்போகாது. டைம் மேனேஜ்மென்ட் மட்டும் அதுக்கு ரொம்பவே முக்கியம்.

இதையும் பாருங்க : ‘கிளாப் போர்டு அடிக்க கூட லாக்கில்லாத பையன்’ – கதையை கூட Ok சொல்லிவிட்டு பாரதி ராஜா படத்தில் இருந்து விலகிய ஜெயலலிதா. அவரே சொன்ன காரணம்.

- Advertisement -

வாரணம் ஆயிரம் பட வாய்ப்பு :

படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் தான் இந்த மாதிரியான கலை எல்லாம் கத்துப்பாங்க என்கிற தவறான புரிதலும் இங்க நிறைய இருக்கு. அதேபோல் இதுவரை நானாக எந்த வாய்ப்பும் தேடி போனதில்லை. என்னை நம்பி நீங்க இது பண்ணா நல்லா இருக்கும்னு தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து இருந்தேன். டான்ஸ் மூலமாகத்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பார்த்துட்டு கவிதாலயா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியா இருப்பீர்கள் என்று சொல்லி ஆடிசனுக்கு கூப்பிட்டிருந்தார். டான்ஸ், நடிப்பு எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதனால் அது இயல்பாக அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நடித்தேன்.

சமுத்திரகனி இயக்கிய சீரியல் :

உடனே நாளையிலிருந்து சூட்க்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். அப்படி தான் என்னுடைய சின்னத்திரை கேரியர் தொடங்கியது. மேலும், நான் நடித்த ஒரு சீரியலை இயக்குனர் சமுத்திரகனி தான் டைரக்ட் பண்ணி இருந்தார். அவர் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லி கொடுத்தார். எல்லோரும் நடிப்பில் எல் கே ஜி லிருந்து ஆரம்பிப்பார்கள். நான் நேரடியாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாதிரியான வாய்ப்பு அமைந்தது. அதோடு திருமணத்திற்குப் பிறகுதான் நான் நடிக்கவே ஆரம்பித்தேன். என் கணவர் நரேந்திரா. ரொம்ப வருஷம் அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ணினேன். அவர் பரதநாட்டியத்தில் என்னை விட சூப்பர் சீனியர். இரண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டது. வீட்டில் சொல்லி பெரியவங்க சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.

-விளம்பரம்-

கோலங்கள் சீரியல் :

என்னுடைய குரு, நலம் விரும்பி எல்லாம் அவர் தான். டான்ஸ் பொறுத்தவரை இன்றைக்கும் அவர் முன்னாடி நிற்கும்போது நான் ஸ்டுடண்டாகத்தான் இருப்பேன். அவர் மேடையில் ஆடுவது பார்க்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். எதார்த்தமாக ஒருநாள் கோலங்கள் சீரியல் ஷூட்டுக்கு போய் இருந்தேன். என் கணவர் அந்த சீரியலில் நடித்திருந்தார். அவருடன் நானும் செட்டுக்கு போயிருந்தேன். அங்கே என்னை பார்த்துட்டு உங்க மனைவி நடிப்பார்களா? என திருச்செல்வம் சார் கேட்டிருந்தார். உடனே, அவர் அவங்க கிட்டயே நேரடியாகக் கேளுங்கள்? என்று சொல்லவும் என்னிடம் கேட்கும்போது நானும் ஓகே சொல்லிவிட்டேன். தேவயானி மேடமின் தம்பி மனைவியாக நான் அந்த சீரியலில் நடித்திருந்தேன்.

இத்தனை வருடமாக என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்

அப்படியே பல சீரியல்களில் நடித்து இருந்தேன். அதற்குப் பிறகுதான் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். இருந்தாலும் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது வாரணம் ஆயிரம் படம் தான். நான் மீடியாவை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் என் கண்ணை பார்த்து விட்டு நீங்கதானே சூர்யா தங்கச்சி என்று கேட்டிருந்தார்கள். இத்தனை வருடமாக என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது. இதற்கான எல்லாக் கிரிட்டும் இயக்குனர் கௌதம் மேனன் சாருக்கு தான் போகும். அந்த படத்தின் மூலம் பல விஷயங்கள் கத்துக்க வாய்ப்பு கிடைத்தது. பலர் என்னை அஞ்சலி அஞ்சலி தான் கூப்பிடுவார்கள். அந்த படம் முடிந்ததும் தொடர்ந்து தங்கச்சி கதாபாத்திரத்தில் கூப்பிட்டார்கள்.

பட வாய்ப்புகளை மறுக்க காரணம் :

அதனால் பல வாய்ப்புகளை வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். சீரியல் பொறுத்த வரை தொடர்ந்து அழுகிற காட்சிகளை பண்ணிட்டு இருந்தேன். மிஷின் மாதிரி நடிக்கிறாத இருந்தது. நடிப்பு எனக்கு துறை கிடையாது. உடம்பு முடியல என்றாலும் சூட்டிற்கு வந்த ஆகனும் என்று சொல்லுவார்கள். எனக்கு நிம்மதி முக்கியம். அதையும் தாண்டி மரியாதை ரொம்பவே முக்கியம். நைட்ல போன் பண்ணி நாளைக்கு சூட்டிற்கு வந்துடுங்க என்று சொல்லுவாங்க. நாளைக்கு நான் என் வீட்டில் இருப்பேனா? இருக்க மாட்டேனா? என்ற முடிவெடுக்க முடியாத நிலை எனக்கு வந்தது. எப்போதும் பரபரப்பாக இயங்குவதற்கு எனக்கு செட்டாகவில்லை. அதனால்தான் என் கணவருடன் டிஸ்கஸ் பண்ணி இந்த துறை வேண்டாம் என்று அதிலிருந்து ஒதுங்கி விட்டேன். விளம்பர படங்கள் எல்லாம் பண்ணி இருக்கேன். அதெல்லாம் ரெண்டு மூணு நாள் தான் சூட் இருக்கும் என்பதனால் அதுக்கு மட்டும் ஓகே சொல்லி விடுவேன். எங்க விருப்பப்படி 12 ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நானும் என் கணவரும் டான்ஸ் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கும். அதுவே அதிக அளவில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement