‘கிளாப் போர்டு அடிக்க கூட லாக்கில்லாத பையன்’ – கதையை கூட Ok சொல்லிவிட்டு பாரதி ராஜா படத்தில் இருந்து விலகிய ஜெயலலிதா. அவரே சொன்ன காரணம்.

0
520
bharathiraja
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் எல்லாம் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. மேலும், பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-597.jpg

மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பாரதிராஜா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

- Advertisement -

பாரதிராஜா அளித்த பேட்டி:

அதில் அவரிடம் உங்களின் முதல் பட ஹீரோயினியாக ஸ்ரீதேவியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாரதிராஜா கூறியிருப்பது, என்னுடைய முதல் பட ஹீரோயின் ஸ்ரீதேவி என்று யார் சொன்னது? நம் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா மேடம் தான் என்னுடைய முதல் பட ஹீரோயின். இது எல்லோருக்குமே அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. நான் 16 வயதினிலே படத்துக்கு முன்னாடியே கதாசிரியர் ஆர் செல்வராஜ் உடன் சேர்ந்து சொந்த வீடு என்ற ஒரு பென்டாஸ்டிக் கதை பண்ணோம். என் முதலாளி கேஆர்ஜி தான் இந்த படத்தை தயாரிக்க இருந்தார்.

barathiraja

பாரதிராஜா முதல் படத்தின் ஹீரோயினி:

அந்த படம் பெண்ணுரிமை பற்றிப் பேசும் ஒரு சப்ஜெக்ட். சொந்த வீடு படத்திற்கு ஹீரோவா முத்துராமன் ஒப்பந்தம் செய்தேன். ஹீரோயினியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக நானும் செல்வராஜன் சேர்ந்து ஜெயலலிதா மேடத்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு போனோம். பின் ஒரு மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து இருந்து நாங்கள் சொன்ன கதையை ரசித்து கேட்டார்கள் ஜெயலலிதா மேடம். மேலும், அவர்களுக்கு கதை பிடித்துப் போய்விட்டதால், எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு நீங்க தான் இந்த படத்தின் இயக்குனரா? என்று என்னை பார்த்து கேட்டார். நானும், ஆமாம் என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஓகே என்று சொல்லிட்டு 28 நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார் ஜெயலலிதா மேடம்.

-விளம்பரம்-

பாரதிராஜா முதல் படம் நிற்க காரணம்:

பிறகு நான், செல்வராஜ், முத்துராமன், இசையமைப்பாளர் குமார் எல்லோருமே படப்பிடிப்புக்கு போவதற்கு தயாராக இருந்தோம். ஆனால், அப்போது ஃபீல்டில் இருந்த ஒரு பெரிய இயக்குனர் ரொம்ப சின்ன புத்தி கொண்டு நடந்து என்னை பற்றி ஜெயலலிதா மேடம் கிட்ட தப்பு தப்பாக சொல்லி இருக்கிறார். அவர், அவன் ஒரு சின்ன பையன், சூட்டிங் ஸ்பாட்டில் கிளாப் போர்டு அடிக்க கூட லாக்கில்லாத பையன், அவனை நம்பி சூட்டிங் போய் மாட்டிக்காதீங்க மேடம் என்று தடுத்து நிறுத்தி விட்டார். அதனால் சொந்த வீடு படம் அப்படியே நின்றுவிட்டது. பிறகு அதே கதையை தான் ரொம்ப வருடம் கழித்து புதுமைப்பெண் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில் எடுத்தேன்.

ஜெயலலிதா நடிக்க இருந்த படம்:

ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த புதுமை பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்தார். நான் இயக்கிய முதல் படத்தில் ஹீரோயின் யார் பிக்ஸ் பண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். ஏன்னா, எந்த பஞ்சாயத்தும் வரக்கூடாது என்று தான் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன். படம் நான் நினைத்ததை விட நன்றாகவே வந்திருந்தது. ஸ்ரீதேவி ஒரு அற்புதமான நடிகை என்று கூறி இருந்தார். மேலும், ரேவதி, பாண்டியன் நடிப்பில் வெளிவந்த புதுமை பெண் படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் பலரையும் வியக்க வைத்தது. பாரதி கண்ட புதுமை பெண்ணாக அந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாரதிராஜாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த படமாக இது அமைந்தது என்று சொல்லலாம். சொல்லப்போனால் இந்த கதையில் ஜெயலலிதா நடத்தி இருந்தால் அவருக்கு நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.

Advertisement