என்னது வாளமீனுக்கு பாடல் இந்த கமல் படத்தில் இருந்து வந்ததா? 1970லேயே வெளியான பாடல் இதோ.

0
617
- Advertisement -

ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்த வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு படங்களை மொழிமாற்றம் செய்வது வழக்கம். அப்படி ஒரு மொழியில் வெளியான படத்தை மற்ற மொழியில் மொழிமாற்றம் செய்யும் போது அந்த மொழிக்கேற்ப சில விஷயங்களையும், கதைகளையும் மாற்றி கொடுப்பார்கள்.

-விளம்பரம்-

சில சமயம் அந்த படங்கள் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும்போது சூப்பர் சூப்பர் ஹிட் கொடுக்கும். சில சமயம் தோல்வியை கொடுக்கும். ஆனால், பாடல்கள் எல்லாம் அப்படி கிடையாது. ஒரு பாடல் வெளியான போது அது அந்த மொழி, அந்த படத்தில் இருந்து வந்தது தான் என்று எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு காரணம் இசை தான். இந்த நிலையில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் குறித்த தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

சித்திரம் பேசுதடி:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவருடைய இயக்கத்தில் முதலில் வெளியாகியிருந்த படம் சித்திரம் பேசுதடி. இந்த படம் பிரபலமானதோ இல்லையோ இந்த படத்தில் இடம் பெற்ற வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. மீனை வைத்து இந்தப் பாடலை எழுதி பாடி இருக்கிறார் கானா உலகநாதன்.

வாள மீனுக்கு பாடல்:

இந்த ஒரு பாடல் மூலமே இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு நடிகை மாளவிகா நடனமாடிருந்தார். இவர்கள் இருவராலுமே இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படம் சரியாக போகவில்லை என்றாலும் இந்த பாடல் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. அதோடு இந்தப் பாடலின் மூலம் தான் இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம். இப்படி ஒரே பாடலால் மொத்த பேருடைய வாழ்க்கையை திருப்புமுனை ஆக்கியது.

-விளம்பரம்-

மாணவன் படம்:

இந்த நிலையில் இந்தப் பாடல் பழைய பாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பலரும் அறிந்தராத ஒன்று. அதாவது, 1970 ஆம் ஆண்டு வெளிவந்த மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் கமலஹாசன் அவர்கள் முதன்முதலாக இளைஞராக நடித்திருந்தார். இதற்கு முன்பு வரை அவர் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மாணவன் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

பாடல் குறித்த தகவல்:

சங்கர் கணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர் இசையமைத்த பாடலில் ஒன்று தான் விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா. இந்த பாடலுக்கு கமலஹாசன் நடனடிப்பார். இவருடன் குட்டி பத்மினியும் ஆடி இருப்பார். டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா இந்த பாடலை பாடி இருந்தார்கள். இந்தப் பாடல் தான் பல வருடங்களுக்குப் பிறகு சித்திரம் பேசுதடி படத்தில் கானா உலகநாதன் குரலில் அதே மெட்டில் வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் உருவாகி இருக்கிறது.

Advertisement