விஜயகாந்த்தின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்துள்ள அஜித் – இதான் காரணமா?

0
433
- Advertisement -

விஜயகாந்துடன் நடிகர் அஜித் நடிக்க மறுத்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் உச்சகட்ட நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. போலீஸ் என்றால் விஜயகாந்தின் உருவம் தான் முதலில் அனைவர் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தவர்.

-விளம்பரம்-

அதோடு தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களை ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்டதே விஜயகாந்த் தான். இவர் நடிகர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர்கள் என பல பேருக்கு உதவி செய்திருக்கிறார். மேலும், விஜய், சூர்யா போன்ற பல பிரபலங்கள் சினிமா துறையில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் தான். ஆனால், அப்படிப்பட்ட விஜயகாந்தின் படத்தில் அஜித் நடிக்க மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

பெரியண்ணா படம்:

விஜயகாந்தின் உதவியாளராக இருந்தவர் சுப்பையா. இவருடைய தயாரிப்பில் உருவான தான் பெரியண்ணா. எஸ் ஏ சி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மனோரமா, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இந்தநிலையில் இந்த படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான்.

அஜித் நடிக்க மறுத்த காரணம்:

மேலும், இது தொடர்பாக அஜித் இடம் கேட்டிருந்தார்கள். அப்போது அஜித், எனக்கு முதுகு வலி பிரச்சனை அதிகமாக இருக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் நான் படுத்து விட்டால் பெயர் கெட்டுப் போய்விடும். அதனால் வேண்டாம், என்னால் நடிக்க முடியாது என்று கூறி இருந்தார். அதற்குப் பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. பெரியண்ணா படத்தின் மூலம் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

அஜித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. ஆனால், கடந்த சில வருடமாக இவர் படங்கள் எதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் ‘ துணிவு’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

விடாமுயற்சி படம்:

இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement