விக்ரம் வேதாவை எடுத்த புஷ்கர் காயத்ரியின் ‘வதந்தி’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
2211
- Advertisement -

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் எஸ். ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் இந்த வலைதள தொடருக்கு ஒளிப்பதிவு மற்றும் சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். புஷ்கர் காயத்திரி இந்த வெப் சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது. ஆனால், அந்த இடத்தில் ஒரு பெண் இறந்து பிணமாக இருக்கிறார். அந்த சமயம் பார்த்து இவர்களுடன் சென்ற கதாநாயகியும் காணாமல் போகிறார். இதனால் கதாநாயகியும் இறந்திருப்பார் என்று படக்குழு பயந்து சமூக வலைத்தளங்களில் கதாநாயகி இறந்து விட்டதாக அறிவிக்கிறது. பின் கதாநாயகி படக்குழுவினருக்கு போன் செய்து, நான் என்னுடைய காதலனுடன் பெங்களூருக்கு சென்று விட்டேன்.

- Advertisement -

என்னை பற்றி தவறான வதந்திகளை வெளியிடாதீர்கள் என்று கூறுகிறார். இந்த கேசை தான் படத்தின் நாயகன் எஸ் ஜே சூர்யா விசாரிக்க வருகிறார். இறந்து கிடந்த பெண்ணை பரிசோதித்த போது அவர் லைலாவின் மகள் வெலோனி என்பது தெரிகிறது. இதை விசாரிக்க எஸ் ஜே சூர்யா வெலோனியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு பல தகவலுக்கு கிடைக்கிறது. வெலோனியின் அம்மா ஒரு லாட்ஜ் நடத்துகிறார். அங்கு தான் அவரின் குடும்பமும் தங்கி இருக்கிறது.

அதோடு வெலோனி ஆண்களிடம் அதிகமாக வலிந்து பேசுபவர் என்று தெரிய வருகிறது. பின் அவரை பற்றி நல்லவிதமான தகவல் கிடைத்தவுடன் இந்த கேசை முடிக்கிறார்கள். ஆனால், எஸ்.ஜே சூர்யாவின் மனதுக்குள் இந்த கேஸ் உறுதிக் கொண்டிருக்கிறது. பின் இவர் தனியாக சென்று விசாரிக்கிறார். வெலோனி எப்படிப்பட்டவர்? அவரை யார் கொன்றார்கள்? இதை எல்லாம் எஸ் ஜே சூர்யா கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி.

-விளம்பரம்-

8 எபிசோடுகளாக இந்த வதந்தி வலைத்தளத் தொடர் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த கதையை இயக்குனர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் சில சுவாரசியமான திருப்பங்களை கொடுத்திருக்கிறார். உண்மையைத் தேடி காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் பயணத்தில் வரும் சுவாரசியமான திருப்பங்களே படத்திற்கு பலமாக இருக்கிறது.

இந்தத் தொடரில் புதிய பரிமாணத்தை எஸ் ஜே சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படம் முழுவதும் எஸ் ஜே சூர்யாவே சுமந்து சென்றிருக்கிறார். கொலையின் பின்னணியை கண்டுபிடிக்க எஸ் ஜே சூர்யா எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் சஞ்சனா என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சமுதாயத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் வதந்தி இருக்கிறது. அதில் உண்மையை கண்டுபிடிக்க தனி ஒருவனாக எஸ் ஜே சூர்யா போராடும் கதை. மொத்தத்தில் திரில்லர், க்ரைம் பாணியில் வதந்தி படம் நன்றாக இருக்கிறது.

நிறை :

எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பு

இயக்குனரின் கதைக்களம்

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.

குறை:

கதையை சுற்றி கொண்டு செல்வது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

Advertisement