விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.
கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் வடிவேலு பாலாஜியுடன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய அமுதவாணன் பேட்டி ஒன்றில் பேசுகையில், எல்லாம் எனக்கு கனவு மாதிரி இருகிறது.
சமீத்தில் தான் இயக்குனர் தாம்சன் அது இது எது நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். நான் பழனி பட்டாளம், தீபக், வடிவேலு பாலாஜி இவர்களை வைத்து பண்ணலாம் என்று சொல்லி இருந்தார். பணம் எல்லாம் டிமாண்ட் பண்ணவே மாட்டான். அவன் மிகவும் ஆரோக்கியமான ஆல். ஜிம்லாம் போட்டு ஆர்ம்ஸ்லா காட்டி வெறுப்பேத்துவான். கடைசியா அவன் பேச சொல்ல கூட டல்லா தான் பேசினான். மேலும், mrs &mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் வித்யாசமாக நடனமாட வேண்டும் என்று ஆசைபட்டார் அதற்குள் அவருக்கு ஸ்ட்ரோக் வந்து விட்டதுஎன்று தனது நண்பர் பிரிந்த சோகத்துடன் பேசியுள்ளார் அமுதவாணன்.