புரட்சி வசனம் எல்லாம் படத்தில் தானா ? பாரத் சர்ச்சை குறித்த கேள்விக்கு வடிவேலுவின் பதிலை பாருங்க.

0
767
Vadivelu
- Advertisement -

இந்தியா-பாரத் பெயர் குறித்த சர்ச்சைக்கு வடிவேலு கொடுத்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய படம் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேர்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல சாதனை படைத்து இருந்தது

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினரும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் முன்னேறி பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு நடிப்பும் நன்றாக பேச பட்டது. இதுவரை வடிவேலு தமிழ் சினிமாவில் சம்பாதித்த மொத்த பெயர் புகழையும் இந்த ஒத்த படத்தின் மூலம் சம்பாதித்து விட்டார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

வடிவேலு அளித்த பேட்டி:

இதனை அடுத்து தற்போது வடிவேலு அவர்கள் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் சந்திரமுகி 1ல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் மதுரை சென்றிருக்கிறார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியிருந்தது, சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி சார் நடித்திருந்தார்.

இந்தியா-பாரத் சர்ச்சை:

இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்ப சுவாரசியமான கதை. படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்களும் பாருங்கள். பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே செய்தியாளர் ஒருவர், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து உங்களுடைய கருத்துக்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், நான் அந்த அரசியலுக்குள் போகவில்லை. போகும்போது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement