திருப்பதிக்கு சென்று புதிய சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான் – முஸ்லிம் அமைப்பு புகார்

0
1606
- Advertisement -

ஷாருக்கான் திருப்பதி கோயிலுக்கு சென்று இருப்பது குறித்து முஸ்லிம் அமைப்புகள் அளித்திருக்கும் புகார் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒடி இருந்தது. இதனையடுத்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜவான் படம் வெளியாகியிருக்கிறது. மேலும், படம் நல்லபடியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த வாரம் நடிகர் ஷாருக்கான் அவர்கள் வைஷ்ணு தேவி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருந்தார்.

திருப்பதியில் ஷாருக்கான் :

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி பாலாஜி கோயிலுக்கு நடிகை நயன்தாரா, மகள் சுஹானாவுடன் சென்று ஷாருக்கான் வழிபட்டிருந்தார். தற்போது இது தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் ஷாருக்கான் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர். இவர் இந்து கோயிலுக்கு சென்று இருப்பதை குறித்து சன்னி முஸ்லிமின் பிரதான அமைப்பாளர் ராஸா அகாடமியின் தலைவர் செய்யத் நூரி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியிருப்பது, இஸ்லாம் சிலை வழிபாட்டை அனுமதிப்பதில்லை. இஸ்லாம் மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லாஹ்வின் முன்பு மட்டும் தான் தலை வணங்க வேண்டும். நடிகர்களுக்கு மத நம்பிக்கையில் ஈடுபாடு இல்லை. சில நடிகர்கள் இந்து கடவுள்களை வழிபட்டு ஆர்த்தி எடுக்கின்றனர். இதனால் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஷாருக்கான் திருப்பதிக்கு சென்று வந்ததனால் முஸ்லிம் வாலிபர்கள் மத்தியில் அது பெரும் பாதிப்பாக இருக்காது. அவர்கள் தங்கள் மத நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

யூசுப் முச்சாலா கருத்து:

இவரை எடுத்து மூத்த வழக்கறிஞர் யூசுப் முச்சாலா, ஷாருக்கான் இஸ்லாமிய சட்டத்தை மீறி இருக்கிறார். சிலை வழிபாடு இஸ்லாமியத்திற்கு எதிரானது. திருப்பதி பாலாஜி கோயிலில் வழிபாடு செய்ததன் மூலம் ஷாருக்கான் அடிப்படைக் கொள்கைகளை மீறி இருக்கிறார். ஆனாலும், நான் அவரை விமர்சிக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கும் தங்களது மனசாட்சிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி பலர் ஷாருக்கான் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement