வடிவேலுவின் ரெட் கார்டு நீக்கம் – நிம்மதி பெருமூச்சில் வடிவேலு. ரசிகர்கள் குஷி.

0
1730
vadivelu
- Advertisement -

ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்சனை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது . ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது.

- Advertisement -

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்த்துள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ் பிக்சர்ஸ் சங்கர் அவர்கள் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடித்த நடிகர் திரு வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் நடிகர் வடிவேலு லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பல ஆண்டு கழித்து வடிவேலுவை திரையில் காண உங்களைப் போலவே அங்கும் மிக ஆவலாக இருக்கிறோம்

Advertisement