சினிமாவை பொறுத்த வரை பாலிவுட் சினிமாவில் தான் கவர்ச்சி என்பது மிகவும் சர்வ சாதாரணமாக ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், சமீப காலமாக தென்னிந்திய சினிமாவிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அதிலும் அறிமுக நடிகைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை, ஒரு சில அறிமுக நடிகைகள் கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் காட்டுவதில்லை. இப்படி ஒரு நிலையில் அறிமுக நடிகையான திவ்ய பாரதி கவர்ச்சி உடையில் கொடுத்த போஸ் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதையும் பாருங்க : நயனை போல மாறி நெற்றிக்கண் வசனத்தை பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை. வீடியோ இதோ.
தற்போது ஜி வி பிரகாஷ் ‘பேச்சுலர் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யா பாரதி என்பவர் நடித்துள்ளார். பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிகினி உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.