வடிவேலுவிற்கு டாக்டர் பட்டம் எந்த பிரிவில் தெரியுமா ? – குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்.

0
572
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் :

இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டிலில் சதீஷ் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி இருந்தது. இதனால் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா புரோடக்சன் இந்த படத்தைதயாரித்து இருந்தது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துஇருந்தார்.

-விளம்பரம்-

சந்திரமுகி 2 :

மேலும், இவர்களுடன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் மனம் தளராத வடிவேலு தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராதிகா, லட்சுமி மேனன், ரவி மரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வடிவேலுவிற்கு டாக்டர் பட்டம் :

இந்நிலையில் தற்போது வைகை புயல் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக, வடிவேலுவிற்கு பொழுதுபோக்கிற்காக முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெற்ற வடிவேலு படிக்க எனக்கு படித்தவர்களின் கையால் முணர்வர் பட்டம் வாங்குவதில் மகிச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த செய்தி வைரலானதை அடுத்து பலரும் வடிவேலுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement